தேங்காயை பச்சையாக ஒரு வேளை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மை....
பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்.ஆனால் எப்பொழுது கொழுப்பு உருவாகும் என்றால் அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாக மாறும்.
தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால் ,அதுதான் அமிர்தம்.உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்.இரத்தத்தை சுத்தமாக்கும்.உடலை உரமாக்கும்.உச்சி முதல் பாதம் வரை உள்ள உறுப்புகளை புதுப்பிக்கும்.
தேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு சாயங்கால சிற்றுண்டி தந்து பாருங்கள்.அவ்வளவு ஆரோகியம்.காலையில் தேங்காயை துருவி அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன் நாட்டு சர்க்கரை (அ)கருப்பட்டி (அ)தேன் சேர்த்து பாக்கட் பாலைதவிர்த்து விட்டு அதற்கு பதிலாக தந்து பாருங்கள்.ஆரோகியத்தை தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை
குடல் புண், வாய் புண் (Ulcer) இருந்தாலும் எளிதில் குணமாகும். (Vit - B complex) காலையில் உடைத்து 1/2 மணி நேரத்திற்குள் அரைத்து பால் எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது நாட்டு வெல்லம் சேர்த்து 1 சிட்டிகை மஞ்சள் தூள், சிறிது சோம்பு சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் அதன் பலன் உங்களுக்கே தெரியும்.
குறிப்பு:
Extremely Ulcer அதாவது அதிக Ulcer இருந்தால் தேங்காய் பால் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். நீர் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இல்லையெனில் வயிறு குமட்டல் ஏற்படுவது போல் (Vomiting sensation) இருக்கும். தயிர் சாப்பிடுவதாலும் நன்மை உண்டாகும். அதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் (Probiotics) இருப்பதால் வயிற்றில் உள்ள நச்சுக்களை அழித்து வயிறு புண் சரியாகும். செரிமான மண்டலத்தை சீராக்கும்.
Comments