மதுக்குடிப்பதை தவிருங்கள்
மது எந்தவகையிலும் ஆரோக்கியமான வாழ்வுக்கு ஏற்ற உகந்த உணவுப் பொருளாக அல்லது திரவமாக இருந்ததில்லை. மது குடித்தால் கொரோனா கிருமிகள் செத்து விடும் என்று மார்ச் மாதம் ஒரு தவறான தகவல் சமூகவலைதளங்களில் வலம் வந்தது. அப்போதே இதற்கு உலக சுகாதார நிறுவனம் மறுப்புத் தெரிவித்து இருந்தது.
மது குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டால், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மீட்பது மிகவும் கடினம். மதுக்குடிப்போருக்கு கொரோனா தொற்று மட்டுமின்றி எந்த ஒரு தொற்றும் உடனடியாக பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
மதுக்குடிப்பதால் கல்லீரல் மோசமாக பாதிக்கப்படும். கேன்சர், இதய நோய் போன்றவைகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உடல் நலத்தைவிடவும் மனநலத்திலும் கோளாறை ஏற்படுத்தும்.
கொஞ்சம்போல் மது குடித்தால் பாதிப்பு இல்லை என்று சொல்வதும் கட்டுக்கதையாகும். மதுவில் எந்த ஒரு பாதுகாப்பான அளவும் இல்லை. எனவே மதுவை முற்றிலுமாக தவிர்க்க வேண்டியது நல்லது. கொரோனா போன்ற தொற்றில் இருந்து உடனே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால், எளிதில் நோய்தொற்றுக்கு வழி வகுக்கும் மதுபழக்கத்தை முற்றிலும் தவிர்த்து ஆரோயக்கியத்தை பேணுங்கள்.
Comments