ஜீரண சக்தியை அதிகரிக்கும் உணவுகள்


நாம் அன்றாடம் உண்ணும் உணவுகள், தினந்தோறும் ஜீரணம் ஆகி கழிவாக வெளியேறுகிறது. ஜீரண சக்தி ஆரோக்கியமாக இருந்தால்தான் நமது உடலுக்குத் தேவையான ஆற்றல் தடையின்றி கிடைக்கும். ஜீரண சக்தியை நன்றாக வைத்திருக்கும் உணவுகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

வாழைப்பழம்தான்

ஜீரண சக்தியை குறைபாடு இல்லாமல் வைத்துக்கொள்வதற்கு நாம் எப்போதும் முதலிடம் தர வேண்டியது வாழைப்பழங்கள்தான். வாழைப்பழத்தில் உள்ள நார் சத்து குடல் இயக்கத்துக்கு மிகவும் பலன் அளிக்கிறது. குறிப்பாக செவ்வாழைப் பழம் சாப்பிட்டால், ஜீரணசக்தி சீரடையும். உடல் எடையையும் சரியான அளவு நிர்வகிக்க முடியும்.

எலுமிச்சை

தினமும் காலையில் இளம் சூட்டில் தண்ணீரில் எலுமிச்சை சேர்த்து, அதில் கொஞ்சம் தேனும் சேர்த்து அருந்தினால், ஜீரணசக்தி சீரடையும். அதிகாலையில் இதனை குடிப்பதன் மூலம் மெட்டபாலிஸம் அதிகரித்து, உடல் எடை குறையவும் வழி வகுக்கும்.

பப்பாளி பழம்

மிகவும் சத்துள்ள எளிய உணவு வகைகளில் ப ப்பாளி மிகவும் ஜீரண சக்தி கொண்ட இயற்கை உணவாகும். குறிப்பாக ப ப்பாளியில் ப ப்பைன் எனப்படும் என்சைம் இருக்கிறது. எனவே, இது ஜீரண சக்தியை தூண்டி உடலை ஆரோக்கியமாக வைக்கிறது.

வெள்ளரி

நமது உடலில் அமிலத்தன்மையை சரியான அளவு நிலை நிறுத்தும். இரைப்பை அழற்சி காரணமாக ஜீரணக்குழாயில் புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வெள்ளரி உண்பதால் அந்த புண்கள் எளிதில் குணமாகும்.

ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில் வைட்டமின் ஏ, சி, பொட்டாசியம் மற்றும் எண்ணற்ற தாதுக்கள் உள்ளன. ஆப்பிளில் உள்ள நார்சத்து ஜீரண சக்திக்கு மிகவும் ஏற்றதாகும்.

 


Comments


View More

Leave a Comments