ஆராக்கீரையில் ஆஹா எவ்வளவு சத்துகள் தெரியுமா?


 

ஆராக்கீரை அல்லது ஆலக்கீரை என்பது செங்குத்தாக வளர்ந்த தண்டில் நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட மிகவும் சிறிய நீர் தாவரம். நீர் நிலைகளிலும் வாய்க்கால்களிலும் தானே வளர்வது. இதன் இலை மருத்துவ பயனுடையது. ஆரோக்கியமானது.

 

தின்றா லுரிசைதருந் தீராப் பயித்தியத்தை

பொன்றாதா நீரிழிவை புண்ணீரை – யென்றுமிந்த

வூராரை சாராம லோட்டிவிடு நாவிதழா

நீராரைக் கீரையது நீ.

 

நல்ல சுவையும் நாவிதலுமுள்ள நீராரைக் கீரை, பித்தநோயையும், அதிக நீர்ப்போதல் ஆகியவை போக்கக் கூடியதாகும்.  ஆரைக்கீரையை சமைத்துசாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பை நிறுத்தும்.

ஆரைக்கீரை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து 30 கிராம் தூளை அரை லிட்டர் நீரில் போட்டு பாதியாக காய்ச்சி, பாலும், பனங்கற்கண்டும் கலந்து காலை, மாலை பருகி வரப் பகுமூத்திரம, அதிதாகம், சிறுநீரில் ரத்தம் போதல் ஆகியவை தீரும். மன அழுத்தம் உள்ளவர்கள் ஆரைக்கீரையை தொடர்ந்து சாப்பிட மன அழுத்தம் குறையும்.

ஆரைக்கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத்தேக்கரண்டி கலந்து 3 வேளையும் சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எச்சரிக்கை இது கருத்தடை மூலிகையாக செயல்படுவதால் குழந்தை பேறுக்காக காத்திருப்பவர்கள் கருவுற்ற பெண்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.


Comments


View More

Leave a Comments