விரதத்தின் போது நமது உடலின் ஆற்றலை தக்க வைக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா?
நவராத்திரி, புரட்டாசி சனிக்கிழமை விரத நாட்களில் நம் உடலின் ஆற்றலை தக்கவைத்துக் கொள்ளும் உணவு வகைகளை உண்ண வேண்டியது அவசியமாகும். அவை என்னென்ன உணவுகள் என்று பார்க்கலாம்.
இந்தியாவில் செப்டம்பர் இறுதி முதல் அக்டோபர் வரை நவராத்திரி, புரட்டாசி மாத விரதத்தின் போது பெரும்பாலான இந்துக்கள் அசைவ உணவுகளை தவிர்த்து விட்டு சைவ உணவுகள் மட்டும் உண்பர்.
Must Read: மஞ்சள், மிளகாய் உணவில் சேர்த்துக் கொண்டால் கேன்சர் அபாயம் குறையும்
பாதாம்பருப்பு, முந்திரிபருப்பு போன்ற கொட்டை வகைகள், பழங்கள் ஆகியவை நம் உடலுக்கு தேவையான ஆற்றலை தக்க வைத்துக்கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே விரதம் முடிவடைந்து உண்ணும்போது உங்கள் உணவில் இவை போதுமான அளவு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
கொட்டைகள்
பாதாம் பருப்பு உள்ளிட்ட கொட்டைகளில் கார்போ ஹைட்ரேட், புரத சத்துகள் அதிகம் இருப்பதால் உடலில் ஆற்றலை தக்க வைத்துக் கொள்கின்றன. வயிறு முழுமையடைவதை உறுதி செய்கின்றன.
சாபுதானா கிச்சடி (sabundana)
தென்மாநிலங்களில் இது போன்ற கிச்சடி தயாரிக்கபடுவதில்லை. பெரும்பாலும் வடமாநிலங்களில் நவராத்திரியின் போது இந்த கிச்சடியை தயாரித்து மக்கள் உண்பது வழக்கம்.
உருளைக்கிழங்கு, நெய், ஜவ்வரிசி , தேங்காய் துருவல், பச்சை மிளகாய், வேர்க்கடலை ஆகியவை சேர்த்து இந்த கிச்சடி தயாரிக்கப்படுகிறது. இந்த கிச்சடியில் சேர்க்கப்படும் பொருட்களில் நார்சத்து இருப்பதால் அவற்றை உண்ணும்போது நமக்கு போதுமான ஆற்றல் கிடைக்கிறது.
பழங்கள்
பழங்களில் பொதுவாக வைட்டமின் சி அதிகம் உள்ள ஆரஞ்ச், கிவி பழங்களை விரத த்தின் போது எடுத்துக் கொள்ள வேண்டும். இவை உடலுக்கு நீர் சத்தை வழங்குவது மட்டுமின்றி உடலின் ஆற்றலையும் அதிகரிக்கின்றன.
மக்கானா
தாமரை விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் மக்கானாவில் கார்போஹைட்ரேட், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ் ஆகிய சத்துகள் அடங்கியுள்ளன. இவையும் நமது உடலின் ஆற்றலை அதிகரிக்கூடியவை.
-பா.கனீஸ்வரி
#NavaratriFoods #NavaratriFasting #NavaratriVra
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

Comments
View More