டோர் டெலிவரி வழியே கொரோனா தொற்று நுழையாமல் தடுக்க...


வெளியே எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பவர்களுக்கும் கொரோனா தொற்று பரவத்தான் செய்கின்றது. எப்படியாவது கொரோனா தொற்று வந்து விடுகிறது. குறிப்பாக டோர் டெலிவரி மூலம் பொருட்களை வாங்கும்போது அந்த பொருட்களில் ஒட்டி இருக்கும் கொரோனா தொற்றின் துகள்கள் கூட உங்களைத் தொற்ற வாய்ப்பிருக்கிறது. எனவே டோர் டெலிவரியின் மூலம் வரவழைக்கும் பொருட்களை பாதுகாப்பாக பெற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

டோர் டெலிவரி செய்யும் நிறுவனங்களும் இப்போது பொருட்களை பாதுகாப்புடன் டெலிவரி செய்ய வேண்டும் என்பதில் உறுதியோடு இருக்கிறார்கள்.

டோர் டெலிவரியில் முக்கிய பங்கு வகிக்கும் மொபைல் செயலிகளில் டெலிவரி ஆப்ஷனை தேர்வு செய்யும்போது தொடர்புஅற்ற டெலிவரி என்ற தொற்று தடுப்பு டெலிவரியை உறுதி செய்வதாக உணவு விநியோக நிறுவனங்கள் கூறி இருக்கின்றன.

ஆன்லைன் வழியே டோர் டெலிவரிக்கான பொருட்களை ஆர்டர் செய்யும்போது அதற்கான பணத்தை டெலிவரி செய்யும் பணியாளரிடம் பணமாக கொடுப்பதற்கு பதில் உங்களுடைய வங்கி கணக்கில் இருந்து அல்லது கடன் அட்டை, டெபிட் அட்டையில் இருந்து செலுத்துவது நல்லது.

டெலிவரி செய்ய வரும் நபர்களிடம் இருந்து நீங்களே உங்கள் கையில் பொருட்களை வாங்காமல், அதனை வாசல் அருகே வைத்து செல்லும்படி அல்லது வாசல் கதவில் தொங்க விட்டிருக்கும் பையில் வைத்து செல்லும்படி அறிவுறுத்தலாம். இப்படி செய்தால் உங்களுக்கும், உணவு டெலிவரி செய்யும் நபருக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

டோர் டெலிவரியில் வாங்கப்படும் காய்கறிகளை சுத்தமான தண்ணீரில் கழுவிய பின்னர் உபயோகிக்கவும் அல்லது அதனை குளிர்சாதனப்பெட்டியில் பத்திரப்படுத்தி வைக்கவும்.


Comments


View More

Leave a Comments