ஜீரண கோளாறுகளை நீக்கும் இலந்தைப் பழத்தின் மகிமை..


இலந்தைப்பழம் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க. அளவுல சின்னதா ரொம்பவும் விலை குறைவான இந்த பழத்தை யாரும் பெருசா வாங்கி சாப்பிடுறதில்லை. ஏழைகள் மட்டுமே பெரும்பாலும் விரும்பி சாப்பிடுவாங்க. சென்னை மாதிரி இடங்கள்ல சீமை இலந்தைனு ஒண்ணு விப்பாங்க, அதை வாங்கி சாப்பிடுவாங்க.
சின்ன இலந்தைப்பழத்துலதான் நிறைய சத்து இருக்கு. வைட்டமின் ‘சி’ யும் உடம்புக்கு தேவையான எல்லா சத்தும் இருக்கு. பகல் சாப்பாட்டுக்கு பிறகு இலந்தைப்பழத்தை சாப்பிட்டா நாம சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாகுறதோட பித்தமும், கபமும் சரியாகும். ரத்தம் சுத்தமாகும். ஆனா கொஞ்சம் அதிகமா சாப்பிட்டா மறுநாள் காலையில மலம் கொஞ்சம் இளகலா போகும். அதுல ஒண்ணும் தப்பு இல்ல.
இலந்தைப்பழம் தாராளமா கிடைக்குற காலத்துல இதை வாங்கி மிளகாய் வத்தலும், உப்பும் சேர்த்து அரைச்சி அடை மாதிரி தட்டி வெயில்ல காய வச்சி தேவையான நேரங்கள்ல சாப்பிடலாம். இல்லைன்னா கொதிக்கிற தண்ணியில போட்டு பசையாக்கி கடுகு, உளுந்தம்பருப்பு சேர்த்து தாளிச்சி துவையலா செஞ்சி சாப்பிடலாம்.
இப்பிடி சாப்பிடுறதால மேலே சொன்னா கோளாறுகள் சரியாகும். உடம்புக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். இலந்தைப்பழம் மட்டும் இல்லாம இலந்தைப்பட்டையையும் பயன்படுத்தலாம். அதை கஷாயமாக்கி வாதப்பிரச்சினை வந்தவங்களுக்கு கொடுத்தா சரியாகும். விலை குறைவான பழத்துல இவ்வளவு விஷயம் இருக்கு.
-மரிய பெல்சின்
(திரு. மரியபெல்சின் அவர்களை  95514 86617 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்)
#BenefitsOfElanthaPazham #ElanthaPazham #JujubeFruit #FoodNewsTamil
 

Comments


View More

Leave a Comments