உணவு வங்கி சினேகா மோகன்தாஸ்


 

பிரதமர் நரேந்திரமோடியின் சமூக வலைதளப்பக்கங்களை நிர்வகித்துவரும் பெண்களில் ஒருவராக தமிழகத்தைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் ஆதரவற்றோர்களுக்கு உணவு அளிக்கும் உணவு வங்கி என்ற தன்னார்வ அமைப்பினை நிறுவி நடத்தி வருகிறார்.

ஆதரவற்றவர்கள், சாலையோரங்களில் தஞ்சம் அடைந்தவர்கள் ஆகியோருக்கு தினமும் தேடிச்சென்று உணவு அளித்து வருகிறார்.  இவரது அம்மாதான் இது போன்ற முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கிறார். இவர்கள் வீட்டில் ஏதேனும் விஷேசம் என்றால், ஏழைகளை அழைத்து வந்து உணவு அளிப்பது இவர்கள் வழக்கம். சிறுவயது முதல் இதனை பார்த்து வளர்ந்த சினேகா, ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிக்கும் உணவு வங்கி நெட் ஒர்க்கை தொடங்கினார்.

முதலில் சிறிய அளவில் உணவு அளிக்கத் தொடங்கிய சினேகா, தம்மை போன்ற பிற தன்னார்வலர்களையும் இணைத்து பெரும் அளவில் பலருக்கு உணவு அளித்து வருகிறார். இப்போது சென்னை முழுவதும் இவர்கள் 5000 உணவு பொட்டலங்களை ஆதரவு அற்றவர்களுக்கு வழங்குகின்றனர்.

சென்னை மட்டுமின்றி இப்போது கோவை, மதுரை, சேலம், ஐதராபாத் போன்ற நகரங்களிலும் அங்குள்ள தன்னாரவலர்களை ஒருங்கிணைத்து ஆதரவற்றவர்களுக்கு உணவு கொடுக்கும் பணிகளை செய்து வருகிறார். இவரது இந்த சேவை மனப்பான்மையைப் பார்த்துத்தான் பிரதமர் மோடி இவருக்கு தம்முடைய சமூக வலைதளப்பக்கங்களை நிர்வகிக்கும் பொறுப்பை வழங்கி இருக்கிறார்.


Comments


View More

Leave a Comments