
பிரதமர் மோடி என்ன உணவுகள் சாப்பிடுகிறார் என்று தெரியுமா?
பசி என்பது அந்தஸ்து பார்த்தோ ஏழை , பணக்காரன், பதவியில் இருப்பவர், சாதாரண மனிதர் என்று பார்த்தோ வராது. அனைத்து மனிதர்களுக்கும் பசி பொதுவானது. அனைத்து மனிதர்களும் பசிக்கும் போது தண்ணீரோ அல்லது தங்களின் அந்தஸ்த்துக்கு ஏற்ப அறுசுவை உணவுகளை உண்பதோ இயல்பான ஒன்று.
நமது நாட்டின் பிரதமரான நரேந்திரமோடி என்ன உணவு உட்கொள்கிறார் என்பது நம் எல்லோருக்கும் மனதளவில் எழும் கேள்வி.
பிரதமர் மோடிக்கு பிடித்தமானது சைவ உணவுதான். சைவ உணவிலும் குறிப்பாக குஜராத் மாநிலத்தின் பாரம்பர்ய சைவ உணவுதான் அவருக்குப் பிடிக்கும். நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் மோடி, நாடாளுமன்ற கேன்டீனில் சாப்பிடுவது வழக்கம். அப்போது சாக் என அழைக்கப்படும் வேகவைக்கப்பட்ட காய்கறி கலவை, பருப்பு, காய்கறிகள் ஆகியவற்றையே விரும்பி சாப்பிடுகிறார். மதிய உணவு முடிந்ததும் பழக்கலவைகளை சாப்பிடுவதும் அவரது வழக்கம்.
மோடி அரபு எமிரேட் பயணம் மேற்கொண்டபோது அவருக்காக சஞ்சீவ் கபூர் என்ற செஃப், அறுசுவை கொண்ட சைவ உணவை சமைத்துப் பரிமாறினார். ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியின் போது மோடி விரதம் இருப்பது வழக்கம். நவராத்திரியின் போது அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்தபோது வெள்ளை மாளிகையில் தரப்பட்ட எலுமிச்சை பழ ரசம் மற்றும் ஒருகோப்பை தேநீர் மட்டுமே குடித்தார்.
Comments