சாதாரண காய்ச்சல் தலைவலி சளியை ஒரே நாளில் குணப்படுத்தும் உணவுகள்


சாதாரண காய்ச்சல், சளி போன்றவற்றை நாம் உண்ணும் உணவு வகைகளின் மூலம் ஒரே நாளில் குணப்படுத்த முடியும் என்கின்றனர் 
காய்ச்சலின் போது பிரட் சாப்பிடக்கூடாது. அதற்கு பதில் ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாப்பம் போன்ற உணவு வகைகளை சாப்பிடலாம். தொட்டுக்கொள்ள சாம்பார், குழம்பு ஆகியவற்றைத் தவிர்த்து ஆரோக்கியமான புதினா அல்லது கொத்தமல்லி சட்னி வைத்து சாப்பிடலாம். இஞ்சி சேர்த்த துவையல் செய்து சாப்பிடலாம். அதிகமாக சாப்பிடாமல் வயதுக்கு ஏற்றவாறு நான்கு இட்லிகள் வரை சாப்பிடலாம். அதிகமாக சாப்பிட்டால் வாந்தி, குமட்டல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதிக சூடு இல்லாமல் வெதுவெதுப்பான சூட்டில் உணவுவகைகளை சாப்பிட வேண்டும். 
மதியத்தில் அரிசியை ரவையாக்கி அதனை கஞ்சியாக மாற்றி குடிக்க வேண்டும். கஞ்சியில் சீரகப்பொடி, பெருங்காயம்,  உப்பு சேர்துக் குடிக்க வேண்டும். தேவைப்பட்டால் புதினா சட்னி எடுத்துக் கொள்ளலாம். ஒரு டம்ளர் அளவுக்கு வெதுவெதுப்பான சீரக தண்ணீரை குடிக வேண்டும். புளி குறைவாக சேர்த்து பூண்டு சேர்த்த மிளகு ரசத்தை குடிக்கலாம். 
இரவில் ஆவியில் வேக வைத்த உணவு அல்லது கஞ்சி சாப்பிட வேண்டும். காய்ச்சல் அதிகமாக இல்லை எனில் எண்ணைய் அதிகம் சேர்க்காத சப்பாத்தி சாப்பிடலாம். பால், காஃபி, தேநீர் எதுவும் இரவில் சாப்பிடக் கூடாது. சுக்குமல்லி காஃபி, வெதுவெதுப்பான தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும். 
இது தவிர பகல் நேரங்களில் 5 உலர் திராட்சைகளுடன் மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று உமிழ்நீரோடு சேர்த்து சாப்பிட வேண்டும். 
காய்ச்சல், சளி, இருமல் இருக்கும் போது தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் வெதுவெதுப்பான நீராக இருந்தால் நல்லது. அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்காமல் வீட்டுக்குள்ளேயே நடந்து கொடுக்கலாம். அதிக மூக்கப்படைப்பு இருந்தால் ஆவிபிடித்தால் நன்றாக இருக்கும். 
சளி இருமலின் போது சூடான தேநீர் அல்லது காஃபி குடிப்பதை தவிர்க்கவும். அதற்கு பதில் சுக்கு மல்லி காஃபி குடிக்கலாம். 

 


Comments


View More

Leave a Comments