சுவையான அவல் தோசை இதோ உங்களுக்காக


 

நெல்லில் இருந்து தயாரிக்கப்படும் அவல் மிகுந்த சத்துகளைக் கொண்டது. குறிப்பாக நார்சத்து மிக்க உணவு. அவலை ஊறவைத்து, நாட்டுசர்க்கரை கலந்து காலைவேளைகளில் சாப்பிட்டால், உடல் எடை குறையும், ஜீரணசக்திக்கு  ஏற்றது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அவல் உணவுகளை சாப்பிடலாம்.

இந்த நிலையில் முகநூலில் இயற்கை உணவுகள் என்ற பக்கத்தில் அவல் தோசை குறித்த குறிப்பு நம் கண்ணில் பட்டது. அது இங்கே வாசகர்கள் பார்வைக்கு...

அரிசிமாவு - சிறிதளவு
கெட்டி அவல் - ஒரு கப்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் _ தேவையான அளவு.
முதலில் அவலை 20 நிமிடம் ஊறவைத்து, மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பிறகு அத்துடன் அரிசிமாவு, உப்பு போட்டு, தோசை மாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் இந்த மாவை மெல்லிசாக வார்த்து எடுக்கவும். தேங்காய் சட்னி அல்லது மிளகாய் சட்னி தொட்டு சுடச்சுட சாப்பிட்டால், அமிர்தமாக இருக்கும். அவல் தோசை செய்வது எப்படிhttps://goo.gl/v7jKSL  என்ற வீடியவை இங்கே கிளிக்  செய்து பார்க்கலாம்.

செய்தி நன்றி; இயற்கை உணவுகள்


Comments


View More

Leave a Comments