ஸ்விக்கியின் இன்ஸ்டா மார்ட்


உணவு வகைகளை சுடச்சுட உணவகங்களில் இருந்து வீடுகளுக்கு விநியோகிப்பதில் பெயர்பெற்ற நிறுவனம் ஸ்விக்கி. இந்த நிறுவனம் இப்போது கொரோனா ஊரடங்கு காலத்தின் சேவையாக மளிகைப் பொருட்களையும் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே டெலிவரி செய்து வருகிறது.

இதுவரை ஸ்விக்கி ஸ்டோர்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து பொருட்களை டெலிவரி செய்த ஸ்விக்கி, இப்போது பிளாக் ஸ்டோர்ஸ் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 2500 வகையான மளிகைப் பொருட்களை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு ஸ்விக்கி டெலிவரி செய்யத் திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக இந்த திட்டம் குருகிராமில் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்து பெங்களூருவிலும் பின்னர் பிற நகரங்களிலும் இந்த சேவை விரிவு படுத்தப்பட உள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் கூறி உள்ளது. இந்த சேவையின் மூலம் 30 முதல் 45 நிமிடங்களில் மளிகைப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய முடியும் என்று ஸ்விக்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.


Comments


View More

Leave a Comments