கோவிட்-19-ல் (கொரோனா)இருந்து குணம் அடைந்த பின்னர் என்ன சாப்பிட வேண்டும்?
கொரோனா தொற்று தாக்கம் காரணமாக, குணம் அடைந்த பின்னரும் சோர்வான தன்மை இருக்கும். சோர்வைப் போக்க உடனடி ஆற்றல் தரும் தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும். கஞ்சி, இளநீர், மோர், பழரசம் போன்ற நீர்ச் சத்து அதிகம் உள்ள பானங்களைக் குடிக்க வேண்டும். அதே நேரத்தில் சர்க்கரை நோய் போன்ற சிக்கல்கள் உள்ளவர்கள் மருத்துவர்கள் அறிவுரைப்படி நீர்ச் சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
காலையில் இட்லி, தோசை போன்ற வழக்கமாக உண்ணும் உணவுகளை உண்ணலாம். கேழ்வரகு, கம்பு, வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானிய உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மதிய உணவாகக் கீரை, மோர், பருப்பு சாதம், ரசம் சாதம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். மிளகு, இஞ்சி, பூண்டு ஆகியவையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதிக மசாலா, அதிக காரம் கொண்ட உணவுப் பொருட்களை சில நாட்கள் தவிர்ப்பது நல்லது.
கொரோனா தொற்று கடுமையாகப் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே உணவு முறைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்..
Comments