பசிபோக்கும் பண்பால் உயர்ந்து நிற்கும் உயர்ந்த நடிகர் சத்யராஜின் மகள்


 வில்லன் நடிகராக அறியப்பட்ட சத்யராஜ் உண்மையில் கதாநாயக குணங்களைக் கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். முற்போக்குவாதி, பெரியாரிஸ்ட் என்றும் சத்யராஜ்  அறியப்படுகிறார். அவரது மகள் திவ்யா சத்யராஜ் ஒரு ஊட்டசத்து நிபுணர். கடந்த சில ஆண்டுகளாகவே வெளிப்படையாக அதே நேரத்தில் தைரியமாக கருத்துகளை கூறி வருவதன் மூலம் பலராலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

இப்போது இந்த கொரோனா காலகட்டத்தில் மகிழ்மதி என்ற ஏழைகளுக்கு உணவு அளிக்கும் ஒரு இயக்கத்தை திவ்யா சத்யராஜ் தொடங்கி இருக்கிறார்.மகிழ்மதி இயக்கம் தொடங்குவது குறித்து வெளியிட்ட அறிக்கையில், “ இந்தியாவில் ஒரு ஆண்டில் ஒரு கோடி திருமணங்கள் நடைபெறுகின்றன. திருமண விழாக்களில் பரிமாறப்படும் 30 சதவிகித உணவு வீணாகிறது. உணவும், ஊட்டசத்துகளும் வசதியுள்ளவர்களுக்கு மட்டும்தான் என்பதில் நியாயம் இல்லை. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பத்தினரும், குழந்தைகளும் கொரோனா தொற்றுகளில் இருந்து பாதுகாக்கப்பட அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவு வழங்கப்பட வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார் திவ்யா சத்யராஜ்.

மகிழ்மதி இயக்கம் என்பது அரசியல் கட்சியோ அல்லது சாதி, மதம் சார்ந்த அமைப்போ அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். வறுமை கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களுக்கு ஊட்டசத்து நிறைந்த உணவை இலவசமாக வழங்க உருவாக்கப்பட்ட இயக்கம் இது. கொரோனா காலகட்டத்தில் வேலைக்கு செல்ல முடியாமல், வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு தரமான உணவு வழங்குகின்றோம். கொரோனா காலத்தோடு இதை நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து எல்லா காலத்திலும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடரும் என்றும் திவ்யா சத்யாராஜ் விளக்கமாக தெரிவித்துள்ளார். தமது தாயின் பெயரான மகேஸ்வரி என்பதில் முதல் பாதியை இயக்கத்தின் பெயரில் வைத்திருப்பதாக கூறி உள்ளார். நெடிய மனிதரின் மகளாக பண்பால் உயர்ந்து நிற்கிறார்.


Comments


View More

Leave a Comments