பல்வேறு உடல் நல பலன்களைத் தரும் ஆவாரம் பூ தேநீர்


ஏர் முனையின் அடுத்த மதிப்புக்கூட்டல் #ஆவாரம்பூ _டீ தூள்.. எட்டு வருடத்திற்கு முன்பு வரப்பு ஓரத்தில் இரண்டு ஆவாரம் பூ செடி இருந்தது. வேலி புதரை அகற்றும் போது அதை பிடுங்க வேண்டாம்னு சொல்லிவிட்டேன்.ஏன்னா கடந்த ஏழு வருடமாகவே ஆவாரம் பூவில் டீ வைத்துதான் சாப்பிடுகிறோம், இங்க வருபவர்களுக்கும் பருக கொடுக்கிறோம். 

இங்கதான் ஆவாரம் பூவைபற்றி அவ்வளவு விழிப்புணர்வு இல்லைங்க. ஆனா நம்ம வேலூர் CMC மருத்துவக்கல்லூரி மாதிரி கனடா நாட்டில் இருக்கிற ஒரு மருத்துவமனைக்கு இந்த ஆவாரம் பூவைத்தான்  லோகோவா (logo) வைத்துள்ளார்கலாம்.

அந்தளவுக்கு இந்த பூவிற்கு புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருக்கிறதாம்..அதே போல சர்க்கரை நோயாளிகள் இதை டீ யாக பருகும் போது சர்க்கரை அளவு குறைந்து இன்சுலின் சுரப்பு அதிகமாகிறதாம். சிறுநீரக கோளாறுகள் வருவதை தடுக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றதாம். உடல் சூடு, உடல் வறட்சியை தடுக்கிறது, பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும் இது ஓர் நல்ல தீர்வு தருகிறது. 

ஆவாரம் பூ தேநீர்    

இன்னும் சொல்லனும்னா மஞ்சளுக்கு அடுத்த படியாக புற்றுநோய் வராமல்தடுக்கும் தன்மை இந்த ஆவாரம் பூவிற்கு உள்ளது என்பதே நிஜம்.தேயிலை டீ பருகுகிறோம். காபி பருகுகிறோம்..இதெல்லாம் எத்தனை விதமான நஞ்சு தெளிக்ககபடுகிறதுனு விளைகிற இடத்தில் போய் பார்த்தால்தான் நமக்கு தெரியும்.

ஆனா வேலி ஓரத்தில் நீர் எதுவும் பாய்ச்சாமலே ஏழு ஆவாரம் பூச்செடி எங்களுக்கு மாதம்  ஐந்து கிலோ அளவுக்கு பூவை கொடுக்கிறது. அதன் மூலம் ஆவாரம் பூ குளியல் சோப் தயாரிக்கவும்,எங்க டீத்தூள் தேவைக்கும் பயன்படுத்தினோம். மறுபடியும் சில செடிகள் அதோட விதை மூலமா முளைச்சு வந்திருக்கு. சரி அதோட பூவை பறித்து காயவச்சு தூளாக அரைத்து கொடுத்தால் என்னானு மனசுக்குள் தோன்றுச்சு.. அதனால்தான் இம்முயற்சி. உயிர்வேலியில் விளைந்ததைகூட காசாக்குறோம் என்பதைவிட இதுபோல இயற்கையாகவே நோயுக்கு தீர்வு கிடைக்கும்னு தெரியும் போது  இன்னும் பலர் பலனடையட்டுமே என்பதுதான் எங்களோட என்னம்ங்க..

செய்முறை..

கொதித்த ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டிஸ்பூன் ஆவாரம் பூ தூளுடன் தேவைக்கு ஏற்ப நாட்டு சர்க்கரை  அல்லது பனங்கருப்பட்டி கலந்து தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை பருகலாம்ங்க. இதோட விலை 250 gm/155 ₹+கூரியர் கட்டணம்  மேலும் விபரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்க.. https://wa.me/c/918903469996

-திருமூர்த்தி

#AvarampooTea  #AvarampooBenefits  #AvarampooTeaHealthy #AvarampooHerbal

 

Comments


View More

Leave a Comments