மழை காலத்துக்கு ஏற்ற உணவுகள் என்னென்ன என்று தெரியுமா?


மழைகாலத்திலதான் தொற்று நோய்கள் அதிக அளவு பரவுகின்றன. குறிப்பாக கொரோனா தொற்று போன்ற நோய்கள் நம்மை அச்சுறுத்தி வரும் நிலையில் மேலும் அதிக பாதுகாப்புடனும், உடல் நலத்தை பேணும் வகையிலும் இருக்க வேண்டும். 
சிலருக்கு மழை காலம் வந்தாலே மூக்கும் ஒழுக ஆரம்பித்து விடும். சளி, இருமல் போன்ற மழை கால நோய்களும் அவர்களைத் தாக்கக் கூடும். அப்போது வைட்டமின் சி சத்து தரக்கூடிய எலுமிச்சை, ஆரஞ்சு பழரசங்களை அருந்தலாம். சிலருக்கு மழை காலங்களில் இந்த பழரசங்கள் ஒத்துக்கொள்ளாவிட்டால், அதனை தவிர்ப்பதே நல்லது. சளி, இருமலை போக்கும் கைவைத்தியத்தில் கூறப்படும் அருமருந்து துளசி. துளசி இலையை வெறுமனே வாயில் மென்றால் கூட நல்ல பலன் தரும். துளசி ஊறவைத்த தண்ணீரை குடித்தாலும் சளியில் இருந்து விடுபடலாம். துளசி செடியில் படும் காற்றை நாம் சுவாசிக்கும்போதே கூடுதல் பலன் தரும். துளசியின் நறுமணத்தை நாம் சுவாசிப்பதால், நமது சுவாச உறுப்புகளை அவை தூய்மைபடுத்தும். தவிர துளசி இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டால் இருமல், சளி போன்றவை தாக்காது. 
சிலருக்கு மழை, குளிர் காலங்களில் தலையில் நீர் கோர்த்துக்கொள்ளும். அப்போது தலைவலி அதிகரிக்கும். இதிலிருந்து விடுபட மிளகு, சீரகம், இஞ்சி, அண்ணாசிப்பூ, சித்தரத்தை போன்ற இயற்கை பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் குளிர் மற்றும் மழை காலத்தில் உங்கள் உடல்நிலையை பாதுகாக்கும். 


Comments


View More

Leave a Comments