10 ரூபாய்க்கு நலம் தரும் நவதானிய உணவு


சென்னை நங்கநல்லூரில் உள்ள காளிகாம்பால் நவதானிய உணவகத்தில் சுவையான ஆரோக்கியமான உணவை குறைந்த விலைக்கு வழங்கி வருகின்றனர் .

உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் இயற்கையான சிறுதானியங்கள் உண்ண வேண்டும் என்று பலரும் விரும்பினாலும் கூட, அதன் விலை காரணமாக சாப்பிடத் தயங்குகின்றனர். ஆனால், சென்னை நங்கநல்லூரில் உள்ள காளிகாம்பாள் நவதானிய உணவகத்தில் மிகவும் குறைந்த விலையில் ஆரோக்கியமான சிற்றுண்டிகளை சமைத்துத் தருகின்றனர். இந்த உணவகம் மாலை நேரத்தில் மட்டும்தான் செயல்படும். ஐந்து ரூபாய்க்கு சுட சுட வடை விற்பனை செய்கின்றனர். இது தவிர நவதானிய சிற்றுண்டிகள் தலா 10 ரூபாய்க்குத் தருகின்றனர். மாலை நேரத்தில் பசியோடு இருப்பவர்களின் சொர்க்கமாக இந்த கடை விளங்குகின்றது. விலை குறைவு என்பதற்காக அவர்கள் தரம், சுவையில் குறைவைக்கவில்லை. விலை,தரம், சுவை மூன்றிலும் முன்னணியில் இருக்கிறது இந்த காளிகாம்பாள் நவதானிய உணவகம். இது மாலை நான்குமணி முதல் இரவு எட்டுமணி வரை மட்டுமே செயல்படும். இந்த உணவகத்தின் முகவரி காளிகாம்பாள் நவதானிய உணவகம்,(மல்லிகேஸ்வரன் கார் டோர் சர்வீஸ் அருகில்) தெற்கு பிவிநகர், 5வது தெரு, எம்.ஜி.ஆர்.சாலை, நங்கநல்லூர், சென்னை-61 தொடர்பு கொள்ள மொபைல் எண் 9176514549

 

 


Comments


View More

Leave a Comments