மயிலாப்பூர் ஜன்னல் கடை மீண்டும் திறக்கப்பட்டது...
சென்னையின் பாரம்பர்ய உணவு வகைகளுக்குப் பெயர் பெற்றது மயிலாப்பூர் பகுதி. மயிலாப்பூரில் 25 ரூபாய்க்குள் காலை உணவை நீங்கள் சாப்பிட முடியும். அதே நேரத்தில் 250 ரூபாய் செலவில் காலை உணவு சாப்பிடும் வசதிகள் கொண்ட ஆடம்பர உணவகங்களும் மயிலாப்பூரில் இருக்கின்றன.
மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவிலுக்கு அருகே பொன்னம்பல வத்தியார் தெருவில் ஜன்னல் கடை என்றால் தெரியாதவர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு இந்த கடை பிரபலம். மாலை நேரத்தில் பஜ்ஜி, போண்டா, இட்லி போன்ற உணவு வகைகளை கடந்த 30 ஆண்டுகளாக இந்த சிறிய கடை கொடுத்து வருகிறது. இந்த கடையை இரண்டு சகோத ர ர்கள் நடத்தி வந்தனர். அவர்களில் ஒருவரான சிவராம கிருஷ்ணன், அண்மையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இதனால் அவரது சகோ த ர ர் சந்திரசேகரன் உள்ளிட்டோருக்கும் கொரோனா தொற்று பரவியது. இந்த நிலையில் இனிமேல் ஜன்னல் கடை திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இப்போது கொரோனா தொற்றில் இருந்து சந்திரசேகரனும் குடும்பத்தினரும் குணம் அடைந்து விட்டனர். இதையடுத்து சிவராம கிருஷ்ணனின் சகோத ர ர் சந்திரசேகரன் ஜன்னல் கடையை மீண்டும் தொடங்கி இருக்கிறார். மயிலாப்பூர் பக்கம் போனால் ஜன்னல் கடையில் சுடசுட பஜ்ஜி, இட்லிகளை சாப்பிட மறந்து விடாதீர்கள்.
Comments