வயிற்றுப்புண்ணுக்காக எளிய மருந்துகள்..!


வயிற்றுப்புண்களுக்கு தேங்காய், கசகசா சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வருவது நல்ல பலன் தரும். அவ்வப்போது தேங்காய்த்துண்டுகளை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். கைப்பிடி புதினா இலையுடன் சிறு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து எலுமிச்சைச் சாறு, தேன் அல்லது பனங்கல்கண்டு சேர்த்து ஜூஸ் ஆக காலை, மதிய நேரத்தில் அருந்துவதும் பலன் தரும்.

 இதேபோல் காலையில் வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி, சுரைக்காய் போன்றவற்றை தோல், விதை நீக்கி சிறிது ஏலக்காய், வெல்லம் சேர்த்து அரைத்துக் குடிக்கலாம். உணவில் காரம், புளிப்பு குறைத்துச் சாப்பிடுவது நல்லது.

சரியான நேரத்துக்கு சாப்பிட வேண்டும். கற்றாழை ஜூஸ் அருந்துவது நல்ல தீர்வு தரும். வயிற்றில் சேர்ந்திருக்கும் வாயுவை அகற்ற பிரண்டைத்துவையல் சாப்பிட்டு வருவதும் பலன் தரும். சுண்டைக்காய் குழம்பு செய்து சாப்பிடலாம். சுண்டைக்காய் வற்றலை வறுத்தும் சாப்பிடலாம்.

நன்றி; திரு. Maria Bellsin பதிவு 


Comments


View More

Leave a Comments