இனிப்பை அளவோடு எடுத்துக் கொள்வது எப்படி?
அறுசுவைகளில் இனிப்புக்கு என்றும் முக்கிய பங்கு இருக்கிறது. அதிக இனிப்பு எடுத்துக் கொண்டால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அதிக சர்க்கரை காரணமாக உடல் நலனில் பல்வேறு குறைபாடுகள் ஏற்படும். இனிப்புகள் மற்றும் இனிப்பு சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள், வாயு சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள், பழ ரசங்கள், இனிப்பு செறிவூட்டப்பட்ட திரவ மற்றும் பொடி வடிவிலான பானங்கள், குடிநீர், ஊக்கம் அளிக்கும் மற்றும் விளையாட்டுகளுக்கான பானங்கள், ரெடிமேட் தேநீர் மற்றும் காஃபி போன்றவை கலக்கப்பட்ட பால் உள்ளிட்டவை ஆகியவற்றைக் குறைவாகக் குடிக்க வேண்டும்.
பிஸ்கெட், கேக், சாக்லேட் வகைகள் போன்ற இனிப்பு நொறுக்குத் தீனிகளுக்குப் பதில், புதிய பிரஷ்ஷான பழங்களைச் சாப்பிடுங்கள் குறைவான இனிப்பு சத்து கொண்ட பொருட்களைக் குறைவாக உண்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு இனிப்பு சார்ந்த பொருட்கள் கொடுப்பதைத் தவிருங்கள். 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு உப்பு மற்றும் சர்க்கரை கொண்ட இணை உணவுகள் கொடுக்கக்கூடாது. இரண்டு வயதுக்குப் பின்னர் குறைந்த அளவே இந்த உணவுகளைக் கொடுக்க வேண்டும். குறைவாக எடுத்துக் கொள்ள அறிவுறுத்துங்கள்.
Comments