அஜினோ மோட்டோ ஆரோக்கியமானதா?


உப்பு போல உணவில் சுவையை அதிகரிக்கக் கூடிய மோனோசோடியம் குளுட்டமேட் என்ற எம்எஸ்ஜி என்று சுருக்கமாக அழைக்கப்படும் பொருள்தான் அஜினோ மோட்டோவில் உள ளது. அஜினோ மோட்டோ என்பது ஒரு ஜப்பானிய பெயராகும். இந்த பெயரை ஜப்பானில் அஜி னோ மோட்டோ என்று சொல்கிறார்கள் இதன் அர்த்தம் ஜப்பானிய மொழியில் ருசியின் சாரம் என்பதாகும்.

அஜினோ மோட்டா நல்லது என்றும் நல்லதல்ல என்றும் பொதுவான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அஜினோ மோட்டோவை கலந்த உணவை உண்ணும்போது அதில் இருக்கும்  மோனோசோடியம் குளுட்டமேட் என்ற பொருள் மனிதனின் நரம்பு செல்களை அதிகமாக தூண்டும் என்று சொல்லப்படுகிறது. இதனை எலிகளுக்குக் கொடுத்து பரிசோதனை மேற்கொண்டபோது, எலிகளிடம் நரம்பியல் விளைவுகளை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம்(எஃப்டிஏ) அமைப்பு அஜினோ மோட்டோவில் உள்ள மோனோசோடியம் குளுட்டமேட் பொருள் பொதுவாக பாதுகாப்பானது என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் முடிவை உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளின் உணவு பரிசோதனை அமைப்புகள் ஏற்றுக் கொள்கின்றன. இதை வைத்துத்தான் பலரும் இது அபாயம் அல்லாத பொருள் என்று சொல்கின்றனர்.

எஃப்டிஏ-வின் இணையதளத்தில், தக்காளி, வெண்ணைய் போன்ற பொருட்களில் இயற்கையாகவே மோனோசோடியம் குளுட்டமேட் பொருள் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே வரலாற்று காலத்தில் இருந்தே உணவில் இந்தப் பொருள் உபயோகிக்கப்படுகிறது என்று சொல்கின்றனர். எனினும் அஜினோ மோட்டோ கலந்த உணவை சாப்பிடும் சிலருக்கு தலைவலி மற்றும் குமட்டல் அறிகுறிகள இருந்ததாக எஃப்டிஏ-வின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து உயிரியல் பரிசோதனைக்கான அமெரிக்க சங்கங்கள கூட்டமைப்பின் தனிப்பட்ட விஞ்ஞானிகள் குழு இது குறித்து 1990ம் ஆண்டு ஆய்வு மேற்கொண்டது. இந்த விஞ்ஞானிகள் குழு அஜினோ மோட்டோவில் பயன்படுத்தப்படும் பொருள் பாதுகாப்பனது என்று கூறி உள்ளது. அதே நேரத்தில் உணவில் சேர்க்காமல் தனியாக அஜினோ மோட்டவை 3 கிராம் அளவுக்கு அல்லது அதற்கும் அதிகமாக உட்கொள்ளும்போது சில லேசான அறிகுறிகள் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதே நேரத்தில் உணவில் 0.5 கிராமுக்கும் குறைவாக அஜினோ மோட்டோவை உபயோக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

எனினும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் அஜினோ மோட்டோவை தடை செய்யவில்லை. அதே நேரத்தில் அஜினோ மோட்டோ இல்லாத உணவு என்று விற்கப்படும் உணவு வகைகளுக்கு பெரும் கிராக்கி இருந்து வருகிறது.

சர்வதேச அளவில் பாகிஸ்தான் மட்டுமே அஜினோ மோட்டோவை தடை செய்திருக்கிறது. பாகிஸ்தானின் பஞ்சாப் உணவு அதிகார அமைப்பு 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் அஜினோ மோட்டோவுக்கு தடை விதித்திருக்கிறது. இது பாகிஸ்தானில் சீன உப்பு என்று அழைக்கப்படுகிறது.

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அன்றாடம் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளில் சுவைக்காக அஜினோ மோட்டோ சேர்க்கப்படுகிறது. அதே நேரத்தில் மேற்கத்திய நாடுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அஜினோ மோட்டோ சேர்க்கப்படுகிறது.

இந்தியாவில் அஜினோ மோட்டோ மரவள்ளிக்கிழங்கு மற்றும் உருளைக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் பன்றி கணையத்தில் இருந்து தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.


Comments


View More

Leave a Comments