நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஐந்து முக்கியமான காய்கறி, பழங்கள்...


நம் உடலில் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது என்பது ஒன்று அல்லது இரண்டு நாட்களில் முடிந்து விடும் செயல் அல்ல. நோய் எதிர்ப்பு சக்தியை கட்டமைப்பதற்கு கூடுதல் நாட்களும் அவகாசமும் தேவைப்படும். நமது உணவுப் பழக்க வழக்கங்களும், நாம் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறையுமே நமது நோய் எதிர்ப்பு சக்தியை தீர்மானிக்கிறது. 

நாம் உண்ணும் உணவுகள், நம் செயல் திறன் , இரவு தூக்கத்தின் நிலை,  உணர்வுகள், சுகாதாரம் - இவை அனைத்தும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை கட்டமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.  உணவு மற்றும் ஊட்டச்சத்துகளைப் பொறுத்தவரை  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் பங்கு மிகவும் அதிகமாகும். 

தொற்று நோய்களில் இருந்து நம்மை இயற்கையாகவே தற்காத்து கொள்ள வைட்டமின் நிறைந்த உணவுகளை பயன்படுத்த தொடங்குவது நல்லது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 வைட்டமின் நிறைந்த உணவுகள் இங்கே

1. நெல்லிக்காய் 

நெல்லிக்காய்  வைட்டமின் சி நிறைய கொண்டதாகும். சாப்பிடுவதற்கு கசப்பதாக இருக்கும். நெல்லிக்காயை உண்ணும்போது வைட்டமின் அதிகரிக்கும். இது தவிர ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. வைட்டமின் சி ஆன்டிபாடி மற்றும் ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை நிர்வகிக்க நெல்லிக்காய் உதவும்.

இது பெரும்பாலான ஆயுர்வேத மருந்துகளில் பொதுவான மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. சியவன்ப்ராஷ் எனப்படும் பண்டைய மூலிகை தயாரிப்பில் ஒரு முதன்மை மூலப்பொருளாக இது சேர்க்கப்படுகிறது. இது தொற்று நோய்களைத் தடுக்க உதவும் ஒரு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி ஊக்கியாகும்.

2. முருங்கை

முருங்கை 90 பயோஆக்டிவ் சேர்மங்களும், கிட்டத்தட்ட அனைத்து வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்களும் இதில் உள்ளன, இது ஒரு சக்திவாய்ந்த இயற்கை மல்டிவைட்டமின்னாகும். இதற்கு நிகராக வேறு   ஒன்றும் இல்லை. இது புரதம், கால்சியம், பொட்டாசியம், இரும்பு, குரோமியம், மெக்னீசியம், செலினியம், துத்தநாகம் ஆகியவை ஏராளமாக உள்ளன. அதிக அளவு ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது. முருங்கை வைட்டமின்கள் பி 1, பி 2 மற்றும் பி 3 ஆகியவற்றின் மூலாதரமாக திகழ்கிறது.  இது செல்களின்  ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது, இதனால் ஒரு சிறந்த ஆற்றல் ஊக்கியாக செயல்படுகிறது.

முருங்கை ஒரு சக்திவாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவாகும். முருங்கை இலைகளில் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்கள், துத்தநாகம், வைட்டமின் சி மற்றும் பிற ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இவை உதவும். சளித்தொந்தரவு அதிகம் இருந்தால் முருங்கை பூக்களை தண்ணீரில் கொதிக்க வைத்து தேநீராகவும் குடிக்க முயற்சி செய்யலாம்.


3. சர்க்கரை வள்ளிக்கிழங்கு

மலிவான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய இனிப்பு சுவை கொண்ட நோய் எதிர்ப்பு சக்திக்கு ஒரு மிக சிறந்த உணவாகும். இதில் உள்ள வைட்டமின் சி, வைட்டமின் பி 5, பி 7   மற்றும் அந்தோசயினின்கள் அதிக அளவு உள்ளன. மேலும் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

தவிர, சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், குடலின் நுண்ணுயிரியத்திற்கு நல்லது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன.4. மாம்பழம்

கோடைகாலத்திலிருந்து பருவமழைக்கு மாறும்போது மாம்பழங்கள் வருகின்றன. வரவிருக்கும் பருவமழை அச்சுறுத்தலில் இருந்து நம்மை பாதுகாக்க மாம்பழம் உதவுகிறது. 

வைட்டமின் சி நிறைந்த பழம் தவிர, நுண்ணூட்டச்சத்துக்களில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், வைட்டமின் டி, பெரும்பாலான பி வைட்டமின்கள் (வைட்டமின் பி 12 தவிர) மாம்பழத்தில் உள்ளன. 

கூடுதலாக, மாம்பழங்களில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன, இது தோல் செல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க தேவையான புரதமாகும். இது உடலின் இணைப்பு திசுக்கள் மற்றும் இரத்த நாளங்களைப் பாதுகாக்க உதவுகிறது, இதன் மூலம் சருமத்தின் பளபளப்பு அதிகரிக்கிறது, நெகிழ்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் இயற்கையிலேயே முதிர்வடைவதை குறைக்கிறது. மாம்பழத்தில் வைட்டமின் சி, பொட்டாசியம், பி வைட்டமின்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன

5. பூசணி

பெரும்பாலும் பூசணி காயை அவ்வளவாக யாரும் விரும்ப மாட்டார்கள். பெயரைக் கேட்டாலே ஒருவித சலிப்பும் நம்மிடம் உருவாகும். ஆனால்  பூசணியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ ஆகியவை நாம் நம்பமுடியாத அளவுக்கு அதிகம் இருக்கின்றன.  சிறந்த நோய் எதிர்ப்பு திறன் கொண்டதாகும். வைட்டமின் ஏ அதிக அழற்சி எதிர்ப்பு வைட்டமின் ஆகும், ஏனெனில் நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

பின் குறிப்பு; மேற்குறிப்பிட்டவை நோய் எதிர்ப்பு திறன் கொண்டவை என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. எனினும், சில பொருட்கள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தக் கூடும். எனவே அத்தகையவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைபடி இந்த இயற்கை பொருட்களை எடுத்துக் கொள்ளவும். 

-பா.கனீஸ்வரி

#FiveImportantFoods   #VegetablesForImmunity    #FruitsForImmunity

Comments


View More

Leave a Comments