எளியவர்களுக்கு உணவு வழங்கும் ஃபுட் பேங்க் இந்தியா...


சென்னையில் உள்ள சிநேகா என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஃபுட் பேங்க் இந்தியா என்ற அமைப்புத் தொடங்கப்பட்டு கொரோனாவில் தவித்து வருபவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

இப்போது இந்த அமைப்பில் 120க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். சென்னையில் உள்ள பல பகுதிகளில் கொரோனா பொது முடக்கம் காரணமாக உணவு இன்றி தவித்து வருபவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.

நடுத்தெருவில் தவித்தவர்களைக் கண்டறிந்து அவர்களை அரசின் முகாம்களுக்கும் கொண்டு சேர்த்தனர். அதுவரை அவர்களின் பசியைப் போக்கும் வகையில் உணவு அளித்தனர். ஆதரவற்று இருக்கும்  பிற மாநிலத் தொழிலாளர்களுக்கும் இவர்கள் உணவளித்து வருகின்றனர். சென்னையில் தெருக்களில் வசித்து வரும் குருவிக்கார ர்களுக்கும் உணவு வழங்கி வருகின்றனர். உணவுக்கான செலவுகளை இந்த குழுவின் உறுப்பினர்களே பகிர்ந்து கொள்கின்றனர். அதே நேரத்தில் பொதுமக்களில் பலர் உணவாக இவர்களிடம் கொடுத்தால், அதை வாங்கி வேண்டியவர்களுக்கு விநியோகிக்கின்றனர். அதே போலச் சமைத்துச் சாப்பிடும் சூழல் இருப்பவர்களுக்கு மளிகைப் பொருட்களை இலவசமாக வழங்குகின்றனர்.

சென்னையின் முக்கியமான இடங்களில் சமையல் கூடங்கள் அமைத்து அங்குச் சமைத்து ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்க வேண்டும் என்று இவர்கள் திட்டமிடுகின்றனர். அவர்களின் திட்டம் விரைவிலேயே நிஜமாகட்டும் என்று வாழ்த்துவோம். 


Comments


View More

Leave a Comments