இதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்கள் ஏன் என்று தெரியுமா?


பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதைக் கூடிய வரை தவிர்க்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், முட்டைகள் ஆகியவை அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கப் பதப்படுத்தப்படுகின்றன. இறைச்சி, மீன் போன்ற அசைவ உணவுகளும் பதப்படுத்தப்படுகின்றன. பழங்கள், காய்கறிகளை பிரஷ் ஆக வாங்கி உபயோகிப்பதே சிறந்தது. இறைச்சியும் அப்படித்தான் பிரஷ் ஆகக் கிடைக்கும்போது வாங்கி சமைத்து உண்ணுவதே சிறந்த து. வாங்கி இரண்டு நாட்கள் பிரிட்ஜில் வைத்தோ அல்லது பதப்படுத்தப்பட்ட பொருட்களை வாங்கியோ சமைப்பது நல்லதல்ல. பதப்படுத்தப்படும் உணவுகள் ஆயுளைக் குறைக்கும் அளவுக்குத் தீங்கும் விளைவிக்கக் கூடியவை. 
சாஸ், குளிர்பானங்கள் 
சாஸ் மற்றும் குளிர் பானங்கள் ஆகியவற்றை உண்ணும்போது அது சுவையில் நம்மைக் கவர்ந்திழுக்கும். மீண்டும், மீண்டும் சாப்பிடத்தூண்டும். ஆனால், இவற்றில் செயற்கையான சுவையூட்டிகள்தான் சேர்க்கப்பட்டுள்ளன. அவை நாளடைவில் நமக்கு மூட்டுவலி போன்ற உடல் உபாதைகளை ஏற்படுத்தும். ரத்த அழுத்தம், கிட்னி செயலிழப்பு போன்ற குறைபாடுகளையும் ஏற்படுத்தக் கூடும். எனவே, இவற்றைத் தவிர்ப்பது நல்லது. இனிப்பு சுவை வேண்டும் என்றால் சர்க்கரையை அளவோடு பயன்படுத்துங்கள். தேன், நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி போன்ற இயற்கையான பொருட்களை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

மொறு,மொறு சிற்றுணவுகள் 
சிப்ஸ் உள்ளிட்ட பொட்டலத்தில் அடைக்கப்பட்ட ஸ்நாக்ஸ் வகைகளைத் தவிர்ப்பதும் நல்லது. இந்த ஸ்நாக்ஸ் வகைகள் டால்டா, பாமாயில் போன்றவை சேர்த்து தயாரிக்கப்படுவதாக இருக்கலாம். எனவே அவற்றைத் தவிர்ப்பது நல்லது. வீட்டில் தயாரிக்கப்படும் முறுக்கு போன்ற ஆரோக்கியமான நூற்றுக்குத்தீனிகளைச் சாப்பிடுவதே சிறந்தது. 
மைதாவில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் 
மைதாவில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை முற்றிலும் தவிர்ப்பது உங்கள் ஆரோக்கியத்தைக் கூட்டும். மைதா கோதுமையிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. கோதுமையில் இருக்கும் தவிடு நீக்கப்பட்டு, அதில் வெண்மை நிறத்தைத் தக்க வைப்பதற்காக வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால், கோதுமையில் இருக்கும் பி காம்பளக்ஸ் வைட்டமின் இதில் இருப்பதில்லை. 
மைதாவில் தயாரிக்கப்பட்ட பர்க்கர், பிரட், பீட்சா, சமோசா, பப்ஸ் போன்ற உணவுப் பொருட்களையும் தவிர்ப்பது நல்லது. 


Comments


View More

Leave a Comments