சென்னையில் அக்டோபர் 2ம் தேதி உணவே மருந்து மருந்தே உணவு பயிற்சி முகாம்
கொரோனாவுக்குப் பிறகு மக்கள் மத்தியில் உடல்நலம் மீதான அக்கறை அதிகரித்திருக்கிறது. இயற்கை விளைபொருள்கள், ஆர்கானிக் காய்கறிகள், அரிசிகள், சிறுதானியங்களை வாங்கவேண்டும், அவற்றை விதம் விதமாக சமைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
வீட்டின் அஞ்சறைப்பெட்டியில் உள்ள மிளகு, சீரகத்தில் தொடங்கி கறிவேப்பிலை, புதினாவைக்கொண்டு உடல்நலனை எப்படி காப்பது என்று இணையத்தில் தேடுகிறார்கள் சிலர்.
Must Read: கர்ப்ப காலமும் சித்த மருத்துவமும் சித்தமருத்துவர் விக்ரம்குமாரின் கட்டுரை..
இன்னும் சிலர் அதுதொடர்பாக நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விதம்விதமாக சமைத்து அசத்துகிறார்கள். சிறப்பாக மருத்துவ குணம் அறிந்து காலத்துக்கேற்ப செயல்படுகிறார்கள்.
வீட்டைச்சுற்றி தானாக வளர்ந்துகிடக்கும் குப்பைக்கீரையில் தொடங்கி அம்மான்பச்சரிசி, வீட்டுத்தோட்டத்தில் வளரும் துளசி, தூதுவளை, கற்றாழையை எப்படி பயன்படுத்துவது, `உணவே மருந்து மருந்தே உணவு' என்ற அடிப்படையில் அவற்றை எப்படி சேர்த்துக் கொள்வது என்பது பற்றிய தேடலிலும் பலர் ஈடுபடுகின்றனர்.
இதோ... அவர்களுக்காக பாரம்பரிய அரிசிகள் மற்றும் சிறுதானியங்களை எப்படி சமைப்பது? மதிப்புக்கூட்டுவது என்பதுபற்றியும் `உணவே மருந்து மருந்தே உணவு' என்ற பாரம்பரிய மருத்துவ முறைகளையும் ஒருசேர கற்றுத்தர காத்திருக்கிறோம்.
பாரம்பரிய அரிசிகளில் விதம்விதமாக சமைக்க முடியுமா என்ற உங்கள் கேள்விகள் மற்றும் சந்தேகங்களைப் போக்குவிதமாக மண்வாசனை மேனகா அவர்கள் நேரடியாக சில உணவுகளை சமைத்துக் காட்டவிருக்கிறார். அதேபோல், வயிற்றுவலிக்கு புதினா ஜூஸ், காய்ச்சலுக்கு மிளகு கசாயம் போதும் என்பதுபோன்ற எளிய மருத்துவ முறைகளை உங்களுக்கு மரிய பெல்சின் ஆகிய நான் சொல்லித்தர இருக்கிறேன். கட்டணத்துடன் கூடிய இந்தப் பயிற்சிக்கு முன்பதிவு அவசியம். பங்கேற்று பயன்பெறுங்கள்.
#AgriEvent #OrganicAgriculture #NatureLifeStyle #OrganicFoods #SiddhaMedcine
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

Comments
View More