முடி ஆரோக்கியத்துக்கு இந்த உணவுகள் எல்லாம் முக்கியம்...


 

முடி உதிர்தல், வழுக்கை என்பது இப்போதைய காலகட்டங்களில் அதிகம் காணப்படும் பிரச்னையாக இருக்கிறது. முடிதானே என்று யாரும் சாதாரணமாக நினைப்பதில்லை. அது வயது, தோற்றத்தை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. கருகருவென அழகிய முடி வலுவானதாக இருப்பதையே பலரும் விரும்புகின்றனர். ஆனால், எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை. இதனால்தான் வழுக்கை தலையில் முடி வளரவும், முடி உதிர்வை தடுப்பதற்கான மருந்து பொருட்களும் அதிக அளவில் விற்பனை ஆகின்றன.

ஆரோக்கியமான உணவை உண்ணுவதன் வாயிலாக முடியை பாதுகாக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். என்ன வகையான உணவுகளை உண்டால் முடி ஆரோக்கியமாக இருக்கும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

 

பாதாம் பருப்பு

பாதம் பருப்பு எல்லாவகையிலும் சத்துள்ள உணவுப் பொருள். பாதாம் பருப்பில் பயோட்டின், மெக்னீசியம் போன்ற சத்துகள் அதிகம் உள்ளன. கருகருவென முடி வளர்வதற்கு இந்த சத்துகள் உதவுகின்றன. பாதாம் பருப்பை ஊறவைத்து காலையில் நான்கு மட்டும் சாப்பிட்டால் கூட  போதும் என்று மருத்துவர்கள்  கூறுகின்றனர்.

பால் பொருட்கள்

பால், தயிர், வெண்ணைய் போன்ற பால் பொருட்களில் வைட்டமின் பி 7 என்ற பயோட்டின் சத்து உள்ளது. முடி உதிர்வதைத் தடுக்கிறது. இது தவிர பால் பொருட்களில் பி12, இரும்பு, புரதங்கள், ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் போன்ற சத்துகள் முடி கருகருவென வளர்வதற்கு ஏற்றவையாகும்.

அக்ரூட் பருப்பு

பாதாம் போன்றே அக்ரூட் பருப்பும் சத்துகள் கொண்டதாகும். அக்ரூட் பருப்பில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளன. வைட்டமின் பி எனும் பயோடின் சத்து உள்ளது.  தினசரி அதிகபட்சம் மூன்று அக்ரூட் பருப்பு சாப்பிட்டால் கூட போதுமானது.

ஓட்ஸ்

ஓட்ஸில் நார்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற சத்துகள் உள்ளன. வைட்டமின் பி-யும் அதிக அளவு உள்ளது. தலை வழுக்கை ஏற்படாமல் பாதுகாக்கும் சத்துகளை ஒட்ஸ் கொண்டிருக்கிறது.

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் சிலிக்கா தாதுக்கள் உள்ளன. இது முடி உதிர்வதைத் தடுக்கிறது. இதுதவிர கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ சத்தானது தலைமுடியில் ஈரப்பத த்தை தக்க வைக்கிறது.  

#FoodForHair


Comments


View More

Leave a Comments