
நூற்பு எனும் நுண்கலை: திருப்பூர் அருகே இரண்டுநாள் பயிற்சி முகாம்…
நூற்பும், கைத்தறி நெசவும். தற்சார்பின் பக்கங்களில் மிக அவசியமானதும் அடிப்படையானதுமான நூற்பு எனும் நுண்கலையை எளிய முறையில் கற்றுக் கொள்ள அழைக்கிறோம்.
திருப்பூர் அலகுமலைக்கு அருகில் இயங்கிவரும் செம்பருத்தி பண்ணையின், மௌனம் இயற்கை பாடசாலையில் இரண்டு நாள் பயிற்சி ஒருங்கிணைக்கப்படுகிறது (தங்கும் வசதியுடன்). இயற்கை எழில் மிகுந்த சூழலுக்கு நடுவில் கற்றலுக்கான சாலை அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு.
கற்றுக்கொள்ளும் அனைவருக்கும் நூற்கும் கருவியான கைக்கதிர் எனப்படும் தக்களியும், பஞ்சுப் பட்டையும் வழங்கப்படும். அதைக் கொண்டு தங்கள் வீடுகளிலேயே நூற்றுப் பழகலாம்.
நூற்பு எனும் இந்நுண்கலை மன ஒருமைப்பாட்டையும், செயல்திறனையும் மேம்படுத்தும். பொதுவாக சிறுவர்கள் கைக்கதிர் நூற்பில் ஈடுபடும்போது அவர்கள் செய்யும் செயல்களில் கூர்மை ஏற்படும். இருகைகளாலும் வெவ்வேறு செயல்களைச் செய்யப் பழகிவிடுவதால் மூலையின் செயல்திறனும் அதிகரிக்கிறது. இதுவும் ஒருவகை ஓகக்கலைதான் என்பது அனுபவப் பதிவு.இந்த புதிய அனுபவத்தைப் பெறுவதற்கு உங்களை அழைக்கின்றோம். முன்பதிவு அவசியம், 20 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு.
நாள்: 4,5 பிப்ரவரி 2023
இடம்: அலகுமலை, திருப்பூர்.
தொடர்பு : 85083 07617
#HandSpinningAndWeaving #naturelearning #GandhianLifeStyle
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments