நாற்பதைத் தாண்டினால் உணவில் கவனம் தேவை


அவசரகால, டிஜிட்டல் உலகில் இளம் வயதினருக்கே மாரடைப்பு போன்ற உடல்நலக்கோளாறுகள் ஏற்படுகின்றன. எனவே நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் உணவில் போதிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் என்னென்ன உணவுகள் உட்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

சீரான உணவும், சீரான உடற்பயிற்சியும் நாற்பது வயதுக்கு மேல் முக்கியமாகும். தூக்கமும் மிகவும் முக்கியம். குறிப்பாக 7 மணி நேரம் வரை ஆழ்ந்த தூக்கம் தூங்க வேண்டும். மது அருந்துதல், புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும். இவை புத்துணர்ச்சி அளிப்பது போல இருந்தாலும், இவை உடல் நலத்துக்கு தீங்கானவை.

நாற்பது வயதுக்கு மேல் புரதம் உள்ளிட்ட பல்வேறு சத்துகள் உள்ள உணவுகளை உண்ணவேண்டும். குறிப்பாக பார்த்தால் நார்சத்துகள் அதிகம் உள்ள பாதாம் பருப்பு சாப்பிட வேண்டும். நாளொன்றுக்கு பத்து பாதாம் பருப்பு வரை சாப்பிடுவது நல்லது.

நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அவர்களின் வேலை சார்ந்த அழுத்தங்கள் ரத்த அழுத்தம் போன்ற உடல்நலக்கோளாறுகளுக்கு உள்ளாகலாம். எனவே பீட்ரூட்டை அதிகம் எடுத்துக் கொண்டால் ரத்தம் அழுத்தம் குறையும். இதய ஆரோக்கியத்துக்கும் பீட்ரூட் நல்லது. பொட்டாசியம், நைட்ரேட் போன்ற சத்துகள் பீட்ரூட்டில் உள்ளன. உடல் எடையை சீராக பராமரிக்கவும் பீட்ரூட் ஏற்றது.

இளம் வயதில் இருப்பவர்கள், வளரும் குழந்தைகள்தான் முட்டை சாப்பிட வேண்டும் என்றில்லை. நாற்பது வயதுக்கு உட்பட்டவர்களும் முட்டை சாப்பிடலாம். வைட்டமின் டி மற்றும் ஒமேகா 3 அமிலசத்துகள் முட்டையில் உள்ள அதிக புரதமும் முட்டையில் உள்ளது. எனவே வயதான ஆண்கள் முட்டை சாப்பிடலாம்.

 

 


Comments


View More

Leave a Comments