ராகி களி, எலுமிச்சை சாறு... கொரோனாவில் இருந்து மீண்ட 102 வயது மூதாட்டியின் உணவு முறை!


கொரோனா பெருந்தொற்று கர்ப்பிணி பெண்கள் முதல் முதியவர்கள் வரை அனைரையும் பாராபட்சம் இன்றி தாக்கி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மிகவும் அதிக பாதிப்புக்கு உள்ளாக நேரிடுகிறது. சிலர் இறந்தும் போகின்றனர். ஆனால், அதே நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முதியவர்கள் பலர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கின்றனர். 
ஆந்திரமாநிலம் ஆனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தி மண்டலத்தில் வசிக்கும் முன்னநேனி சுப்பம்மா என்ற 102 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரை தவிர அவரது குடும்பத்தைச் சேர்ந்த பிற நான்கு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரது மகனுக்கு நீரழிவு நோயும் இருந்ததால் அவர் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
சுப்பம்மா உட்பட நான்குபேர் மட்டும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு மருத்துவர்களின் அறிவுரைப்படி ம ருந்துகள் எடுத்துக் கொண்டனர். இப்போது சுப்பம்மா கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டு விட்டார். 
102 வயது மூதாட்டியான அவர் கொரோனாவில் இருந்து மீண்டது குறித்து கூறுகையில், தாம் தினமும் ராகி களி சாப்பிடுவதாகவும், எலுமிச்சை சாறு அவ்வப்போது குடிப்பதாகவும் கூறி உள்ளார். தவிர கோழிக்கறி உள்ளிட்ட இதர அசைவ உணவுகளையும் சாப்பிடுவதாகவும் சுப்பம்மா தெரிவித்துளார். அவரது மனதைரியம் மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவையே கொரோனாவில் இருந்து அவரை மீட்டுள்ளது என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். 
செய்தி, படம் நன்றி; தினமணி 

 


Comments


View More

Leave a Comments