பிரிட்டானியா மில்க் பிகிஸ் விளம்பரத்தில் நடிக்க அமிதாப் பச்சனுக்கு எதிர்ப்பு


பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு அண்மையில் இந்திய விளம்பர தரநிலை கவுன்சில் (ASCI) அனுப்பிய அறிவுறுத்தலில், மில்க் பிகிஸ் பிஸ்கட்டில் பால் மற்றும் கோதுமை மாவின் சக்தி இருப்பதாக விளம்பரத்தில் கூறப்பட்டிருப்பது பல நுகர்வோர்களை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளதாக கூறப்பட்டிருந்தது. எனவே,  அமிதாப் பச்சன் நடித்த மில்க் பிகிஸ் விளம்பரத்தைத் திரும்பப் பெறுமாறு  இந்திய விளம்பர தரநிலை கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. 

இந்த நிலையில் ஆரோக்கியமற்றது என்று கூறும் பிஸ்கட் பிராண்டின் விளம்பரத்தில் நடிக்க வேண்டாம் என இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு சுதந்திரமான மருத்துவ நிபுணர்கள், குழந்தை மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் தேசிய சிந்தனைக் குழுவான நியூட்ரிஷன் அட்வகேசி-இந்தியா (NAPi) மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.

 

The letter from Nutrition Advocacy in Public Interest in India (NAPi), a group of independent experts in epidemiology, human nutrition, community nutrition and paediatrics, to Amitabh Bachchan, regarding a Britannia Milk Bikis ad is very well intended, well-worded! 1/8 pic.twitter.com/iiIK01oKJx

— Karthik
 

 

தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் என்று குறிப்பிடப்படும் ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களை அங்கீகரிக்க வேண்டாம் என்றும் அமிதாப்பிடம்  அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Must Read: தொலைத்த ஆரோக்கியத்தை உணவு முறையில் மீட்டெடுக்க உதவும் புத்தகம்….

'பிரிட்டானியா மில்க் பிகிஸ் விளம்பரத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தபோதே அமிதாப்புக்கு இந்த அமைப்பு கடிதம் எழுதியிருந்தது. 'அதிக-பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் அல்லது அதிக கொழுப்பு/சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவுகள் (HFSS)' குழந்தைகளுக்கு ஏற்றதல்ல என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. 

 

அமிதாப் விளம்பரப்படத்துக்கு எதிர்ப்பு குழுவின் உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட கடிதத்தில், அதி-பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் (UPFs) மனித ஆரோக்கியத்திற்கு ஏன் தீங்கு விளைவிக்கின்றன என்பது பற்றிய தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு உணவுப் பொருளை அங்கீகரிக்கலாமா வேண்டாமா என்பதை நீங்கள் முடிவு எடுக்கலாம், ”என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் சமூகக் குழந்தை நல மருத்துவரும், ஜன் ஸ்வஸ்திய அபியானின் கூட்டுக் ஒருங்கிணைப்பாளரும், பொது சுகாதார வள வலையமைப்பின் (PHRN) தேசிய ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் வந்தனா பிரசாத் கையெழுத்திட்டுள்ளார். , அமிதாப்பிடம் இருந்து எந்த பதிலும் வராததால் அவருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளனர்.

2014 ஆம் ஆண்டில் இது போன்று சர்ச்சை எழுந்தபோது பச்சன் பெப்சியுடன் தனது தொடர்பைத் துறந்ததாகக் கூறினார், ஏனெனில்  பெப்சி குடிப்பதால் குழந்தைகளுக்கு  உடல்நல பாதிப்பு ஏற்படும் என்பதால் பச்சன் அப்போது விளம்பரத்தில் நடிக்கவில்லை. 

2018 ஆம் ஆண்டில், ஹார்லிக்ஸ் உடனான விளம்பரப்படத்தில் அவர் நடிக்க மறுத்தார். "எனவே இதுபோன்ற ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களை ஊக்குவிப்பதில் இருந்து அவர் மீண்டும் தன்னைத் துண்டித்துக் கொள்வார் என்று நாங்கள் நம்புகிறோம்."  நியூட்ரிஷன் அட்வகேசி-இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

“குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ‘பிரிட்டானியா மில்க் பிகிஸ்’ பிஸ்கட்களை அங்கீகரிக்க உள்ளதை அறிந்து  அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தோம். இந்த விளம்பரம் நுகர்வோரை தவறாக வழிநடத்துகிறது என்பதை அமிதாப் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் நியூட்ரிஷன் அட்வகேசி-இந்தியா குழு தெரிவித்துள்ளது. 

செய்தி ஆதாரம்;த நியூஸ் இந்தியன் எக்ஸ்பிரஸ்

#BigB  #AmitabhBachchan #BritanniaMilkBikis

 
 

ஆரோக்கியசுவை இணையதளத்தில் விளம்பரம் செய்ய; 7397477987 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Comments


View More

Leave a Comments