பிரியாணியில் எத்தனை சத்துகள் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்...


பிரியாணி என்பது நமது அன்றாட உணவு வகைகளில் ஒன்றாக மாறி விட்டது. பிரியாணியை விரும்பாதவர் யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிரியாணியை விரும்பி சாப்பிடுகின்றனர். பிரியாணியில் என்னென்ன சத்துகள் உள்ளன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பிரியாணியில் சேர்க்கப்படுவதில் முதன்மையானது பாசுமதி அரிசி. வெள்ளை மற்றும் பிரவுன் நிறங்களில் பிரியாணி அரிசி கிடைக்கிறது. பிரியாணி அரிசியில் மற்ற அரிசிகளை விடவும் அதிக நார்சத்து உள்ளது. இதில் உடலுக்கு நன்மை பயக்கும் வேதி குணங்களும் அடங்கியிருக்கின்றன.

பிரியாணியில் சேர்க்கப்படும் பொருட்களில் முதன்மையானது புதினா. புதினாவில் இரும்பு, சுண்ணாம்பு , புரதம், கந்தகம் போன்ற சத்துகள் உள்ளன. தாது உப்புகள், வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவையும் உள்ளன.

பிரியாணியில் புதினா சேர்க்கப்படுவதால், அதிக காரம் மிக்க பிரியாணியை சாப்பிடும்போது வயிற்றுப்போக்கு ஏற்படுவதை தவிர்க்கிறது. வயிற்றுப்புழுக்களை அளிக்க உதவுகிறது. வாயு தொல்லையை அகற்றுகிறது.

பிரியாணியில் அனைத்து  ஊட்டசத்துகளும் இருக்கின்றன. இறைச்சி சேர்ப்பதால் புரோட்டின்கள் கிடைக்கின்றன. அரிசியில் இருந்து கார்ப்போஹைட்ரேட் கிடைக்கிறது. பிரியாணியில் இஞ்சி, சீரகம், மஞ்சள் ஆகியவை சேர்ப்பதன்மூலம் பிரியாணி சாப்பிடுவதால் செரிமானம் பாதிக்கப்படுவதில்லை. இஞ்சி வாயுவை வெளியேற்றுகிறது.

சிக்கன் சேர்க்கப்பட்ட பிரியாணி என்றால், அதில் வைட்டமின் பி3 அதிகம் இருக்கிறது. பிரியாணியில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் தனித்தனி மருத்துவ குணங்களைக் கொண்டவை. பூண்டு வாயுகோளாறுகளைத் தடுக்கிறது. இஞ்சி ந ச்சுத்தன்மையை குறைக்கும். வெங்காயம், மஞ்சள், இஞ்சி, பட்டை , கிராம்பு போன்றவற்றில் உள்ள மெக்னீசியம், வைட்டமின் பி6 சத்துகள் புற்றுநோய் செல்களை அழிக்கக் கூடியவை.

அதே நேரத்தில் பிரியாணியை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக் கூடாது. கடைகளில் சாப்பிடுவதை விடவும், வீட்டில் சமைத்து பிரியாணி சாப்பிடுவது நல்லது. பிரியாணியில் சில நேரம் கெட்டுப்போன இறைச்சியை சேர்க்க வாய்ப்புகள் உள்ளதால், வீட்டில் செய்து சாப்பிடுவது ஆரோக்கியம். வெஜிடபிள் பிரியாணி, காளான் பிரியாணி போன்றவற்றை சாப்பிட்டால் இன்னும் கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கும். ஆனால், வாரத்தில் இரண்டுமுறை என்ற அளவில் மட்டுமே பிரியாணி சாப்பிடுங்கள். அதிகம் வேண்டாம். 


Comments


View More

Leave a Comments