கொரோனாவுக்குப் பிறகு உணவு வழக்கம் எப்படி இருக்கும் ?


 

கொரோனா வைரஸின் தாக்கமானது, சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியம் ஆகியவை தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.

உணவு விநியோகத்திலும் இந்த மூன்றும் முக்கியத்துவம் பெறுகிறது என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. டைன்அவுட் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், உணவு உண்ணுவதற்கு விருப்பமான ஹோட்டல் தேர்வில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு பாதுகாப்பு, உறுதி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு முதன்மை இடம் கொடுப்போம் என்று சொல்லி இருக்கின்றனர்.

20 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனாவுக்குப் பின்பும் ஆன்லைனில் மெனுக்களை பார்த்து தேர்வு செய்வதையே விரும்புவதாக 81 சதவிகிதம் பேர் கூறி இருக்கின்றனர். எனினும் 77 சதவிகிதம் பேர் ரெஸ்டாரெண்டுக்குச் சென்று உணவு சாப்பிடுவோம் என்று கூறி இருக்கின்றனர்.

23 சதவிகிதம் பேர், ஆன்லைன் வழியே பணம் செலுத்துதல், வீட்டுக்கு உணவு டெலிவரி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

ஊரடங்கு காலத்தில் சென்னை, ஐதராபாத், கொல்கத்தா ஆகிய மாநகரங்களில் பிரியாணியைத்தான் முதன்மை உணவாக,விருப்பமான உணவாக கருதுகின்றனர்.  இந்தியாவின் பிற பகுதிகளில் பீட்சாவைத்தான் விருப்ப உணவாக கொண்டிருக்கின்றனர்.

ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும் என்றும், நண்பர்கள், உறவினர்களுடன் ரெஸ்டாரெண்ட் சென்று சாப்பிட காத்திருப்பதாகவும் 77 சதவிகிதம் பேர் சொல்லி இருக்கின்றனர்.


Comments


View More

Leave a Comments