காலையில் சத்தான உணவுகளை சாப்பிடுவதன் பலன் இதுதான்


ஒரு நாளின் தொடக்கத்தில் நாம் சாப்பிடும் உணவுதான் அன்றைய நாளின் நமது ஆற்றலுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தாக இருக்கிறது. எனவே காலையில் சத்தான உணவுகளை சாப்பிடுவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

காலையில் கிரீன் டீ சாப்பிடுவது மிகவும் நல்லது. சர்க்கரை இல்லாமல் க்ரீன் டீ சாப்பிட வேண்டும். இல்லையெனில் எலுமிச்சை அல்லது தேன் கலந்து குடித்தால் இன்னும் கூடுதல் பலன்களைப் பெறலாம். க்ரீன் டீ-யில் நோய் எதி்ர்ப்பு சக்திகள் உள்ளன.

காலையில் ஓட்ஸ் கஞ்சி சாப்பிடலாம். மிகவும் சத்தான உணவு. உங்களை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் உணவில் முதன்மையானது இது. உடல் எடையையும் கட்டுப்படுத்த உதவும்.

தினமும் காலையில் செவ்வாழை சாப்பிடலாம். வாழைப்பழங்கள் பொதுவாக உடல் எடையை அதிகரிக்கும் என்று சொல்வார்கள். ஆனால், செவ்வாழையில் உள்ள தாதுக்கள், வைட்டமின்கள், நார் சத்துகள் உடலுக்கு நல்லது. இந்த வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை இதயத்துக்கு நல்லது.

முட்டையில் புரதங்கள், குறைந்த அளவிலான கலோரிகள் உள்ளன. காலையில் முட்டை சாப்பிடுவதால், அடிக்கடி பசி ஏற்படுவதை தவிர்க்கலாம். ஆரோக்கியமானதும் கூட.

அதே போல ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரி வகைப் பழங்களை காலையில் சாப்பிடுவதும் நல்லது. பெர்ரி வகைப் பழங்களில் மற்ற பழங்களை விடவும் சர்க்கரை சத்து குறைவாக உள்ளது. அதிக நார்சத்து இருக்கிறது.


Comments


View More

Leave a Comments