மரபுவழி திண் பண்டங்கள் தயாரிப்பு பயிற்சி ஏப்ரல் 8 முதல்...


இன்றைய இளைஞர்கள் டிஜிட்டல் நுட்பங்களை கற்றுக் கொள்வதில் காட்டும் அதே ஆர்வத்தை இயற்கை வழி வேளாண்மையை கற்பதிலும் காட்டி வருகின்றனர். தமிழகத்தில் பல இடங்களில் இயற்கை வழி வேளாண்மை குறித்து பல்வேறு பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இயற்கை வேளாண்மையில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

கோவையில் உள்ள செஞ்சோலை எனும் இயற்கை வழி வேளாண்மை பண்ணை அமைப்பு, இயற்கை வேளாண்மை பயிற்சி மற்றும் பாரம்பர்ய திண்பண்டங்கள் தயாரிப்பு பயிற்சியை வழங்கி வருகிறது. இந்த அமைப்பு அதற்காக தனியாக கட்டணம் வசூலிப்பதில்லை. அதே நேரத்தில் தங்கும் இடம் மற்றும் உணவு ஏற்பாட்டுக்கு மட்டும் பயிற்சியில் பங்கேற்போர் பகிர்ந்து கொள்ளும் வகையிலான ஒரு முறையை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக பலருக்கு பயிற்சி அளித்திருக்கின்றனர். 

அந்த வகையில் இப்போது அடுத்ததாக வரும் ஏப்ரல் 8ம் தேதி முதல் மீண்டும் அது போன்ற பயிற்சி நடைபெற உள்ளது. ஒரு மாத தற்சார்பு வாழ்வியல் பயிற்சிமுகாம் என்ற தலைப்பில் இந்த பயிற்சி ஒரு மாதம் நடைபெறும். பயிற்சியின்போது நிரந்தர வேளாண்மை, காய்கறி , கீரை சாகுபடி , கால்நடைப் பராமரிப்பு , இயற்கை வழி பயிர் ஊக்கிகள் தயாரிப்பு , ஒருங்கிணைந்த பண்ணையம், தினசரி காலையில் சிலம்ப பயிற்சி ஆகியவை நடைபெற உள்ளன. பயிற்சி முழுவதும் களப்பயிற்சியாக நடைபெற உள்ளது. 

இதுதவிர மரபுவழி திண்பண்டங்கள் செய்முறைப் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. பயிற்சிக்கு முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். பத்து பேர்களுக்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்போது இடம் கிடைக்காதவர்கள். அடுத்த பயிற்சியின் போதுகூட சேர வாய்ப்புகள் இருக்கின்றன. 

தொடர்புக்கு; செந்தில்நாதன் 8489750624, ஆவூர் முத்து; 9600873444

-பா.கனீஸ்வரி 

#TraditionalSnacks  #CookingTraining #CookingClass #OrganicAgriClass #பாரம்பர்யதிண்பண்டங்கள் #இயற்கைவழிவேளாண்மை   


Comments


View More

Leave a Comments