சென்னையில் அக்டோபர் 2 இணைவோம் வாருங்கள்….
காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி,அன்று சென்னையில் நம்மாழ்வார் மக்கள் குழு நண்பர்கள் இணைந்து 'வள்ளுவம் இயற்கை சந்தைக்கூடல்' என்ற முன்னெடுப்பை ஒருங்கிணைக்கிறார்கள்.
இயற்கைப் பொருளுற்பத்தி மனிதர்களும் நலம்விரும்பும் நுகர்வோர் பலரும் இந்நிகழ்வில் பங்கெடுக்கவுள்ளனர். தோழமை சிவகுருநாதன் இந்நிகழ்வில் பங்கேற்று 'காந்தியின் இராட்டை' எனும் தலைப்பையொட்டி தனது வாழ்வனுபவங்களைப் பகிரவுள்ளார்.
Must Read: உலக சைவ உணவு உண்போர் தினத்தில் சைவ உணவுகளின் சிறப்புகளை அறிந்து கொள்வோம்…
சென்னையில் வாய்ப்புள்ள தோழமைகள் அவசியம் இந்த சந்தைக்கூடலில் கலந்துகொள்ளுங்கள். இயற்கைக்குகந்த பொருளியலின் அடித்தளத்தை வலுப்படுத்தும் இதுபோன்ற முயற்சிகளும், அதில் நிகழும் பயிற்சியரங்குகளும் கலந்துரையாடல்களும் தொடர்ந்து இருப்படைக!
இந்த தருணத்தில் மகாத்மா காந்தி யங் இந்தியாவில் வெளியிட்டிருக்கும் கருத்துகளை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
"இராட்டை வெளிப்படுத்தும் செய்தி என்பது அதன் சுழல்சக்கரத்தின் சுற்றளவைவிடப் பெரிது. அது ஓர் மகத்தான உண்மைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. எளிமையும் சேவையும் அகிம்சையும் அதன் அடிநாதம். ஏழைக்கும் செல்வந்தனுக்கும், முதலாளிக்கும் தொழிலாளிக்கும், ஆள்பவனுக்கும் உழுபவனுக்கும் இடையே அழியாத பிணைப்பை அது உண்டாக்கும். ஒற்றுமைக்கான ஏக்கம் நம் அனைவரிடமும் இயல்பாகவே உள்ளதால் இந்த இராட்டை... உலகத்திற்கான நம் நம்பிக்கையின் செய்தி"-காந்தி (யங் இந்தியா)
#Nammalvar_people_forum #adayar #organicfarming #organic #organicmarketing
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments