உணவு செலவுகளை மிச்சப்படுத்த இப்படியும் சில யோசனைகள்


கொரோனா பொது ஊரடங்கு காரணமாக பலர் வேலை இழந்துள்ளனர். பலருக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது. சம்பளம் குறைந்தாலும், யாரும் உணவு உண்ணாமல் இருக்க முடியாது. எனினும், வருவாய்க்கு ஏற்ற செலவு செய்ய வேண்டும் என்பதையும் மறுக்க முடியாது. எனவே, இது போன்ற காலங்களில் ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிடுவதுடன், நமது பட்ஜெட்டுக்கு ஏற்ப உணவுப் பொருட்களை வாங்க வேண்டும் என்பதும் முக்கியம்.

சந்தையில் அல்லது காய்கறிக்கடையில் சில உணவுப் பொருட்கள் அதிக அளவுக்கு இருக்கும். ஒரு சீஸனுக்கு ஒரு சில பொருட்கள் மட்டுமே அதிகமாக இருக்கும். குறிப்பாக மாம்பழம் என்று வைத்துக்கொள்வோம். மாம்பழத்தை ஏப்ரல் மே மாதங்களில் வாங்கிப் பயன்படுத்தலாம், விலை மலிவாக இருக்கும். பல சத்துகள் நமது உடலுக்கு கிடைக்கும். மாம்பழத்தை நீங்கள் நவம்பர், டிசம்பரிலும் வாங்கலாம். ஆனால், இது ஏதோ ஒரு நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக விலை அதிகமானதாக இருக்கும். எனவே சீசனின் போது ஒரு பொருளை வாங்குவது விலை குறைவாக, ஆரோக்கியமானதாக இருக்கும்.

ஒவ்வொரு வேளையும் சமைப்பதற்கு பதில் ஒரே முறை சமைத்து இரண்டு முறை பயன்படுத்தலாம். உதாராணமாக காலையில் சமைக்கும்போதே மதியத்துக்கும் சேர்த்து சமைக்கலாம். அல்லது மதியம் சமைக்கும்போது இரவுக்கும் சேர்த்து சமைத்து விடலாம். அப்போது எரிபொருள் , தண்ணீர் போன்றவற்றை சிக்கனமாக பயன்படுத்த முடியும்.

கடைகளுக்கு அல்லது சூப்பர் மார்க்கெட்களுக்குப் போகும்போது, கண்ணில் பட்டதை எல்லாம் வாங்க வேண்டும் என்று நினைக்க க் கூடாது. நம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறது. பொருட்களின் தரம் எப்படி இருக்கிறது. விலை குறைவான காய்கறிகள் என்ன இருக்கிறது என்று பார்த்துவிட்டு பொறுமையாக வாங்க வேண்டும். இப்படியெல்லாம் இருந்தால், நம் உடலுக்கும் ஆரோக்கியம், நமது பணத்துக்கும் பாதுகாப்பு என்பதை மறந்து விடாதீர்கள்.


Comments


View More

Leave a Comments