நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் சரிவிகித உணவுகள்-இந்திய உணவுப் பாதுகாப்புத்துறையின் பரிந்துரை


இன்னொரு செய்தியில் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்த சரிவிகித உணவு பற்றிப் பார்த்தோம். இப்போது நமது இந்திய உணவுப் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள சரியானவற்றை உண்ணுங்கள் என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ள நோய் எதிர்ப்புச் சக்தி உணவுகள் குறித்த தகவல்களைப் பார்க்கலாம். 
உங்கள் உள்ளூரில் கிடைக்கும் உணவுகளை உண்ணுங்கள். முழு தானியங்கள், புதிய மற்றும் பருவகால காய்கறிகள், பழங்களை உண்ணுங்கள். பல்வேறு வகையான உணவுகள் உண்ணுவதை உறுதிப்படுத்துங்கள். 
பாரம்பர்ய உணவுகள் மற்றும் உணவு தயாரிப்பில் பாரம்பர்ய முறைகளைப் பின்பற்றுங்கள். அதிகமாக உண்ணுவதை அல்லது குறைவாக உண்ணுவதைத் தவிருங்கள். நிறைவாக உணர்வதற்குக் கொஞ்சம் முன்பே உண்ணுவதை நிறுத்தி விடுங்கள். வயிற்றில் கொஞ்சம் காலியிடம் இருக்கட்டும். 
பிஸ்கட், வெண்ணெய், கேக், வறுத்த உணவுகள், இனிப்பு அதிகம் சேர்க்கப்பட்ட பழரசங்கள், உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட நொறுக்குத் தீனிகள் உள்ளிட்டவற்றைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத தருணங்களில் மிகக்குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும். 
கொழுப்புச் சத்து நிறைந்த வனஸ்பதியைத் தவிர்க்க வேண்டும். தினசரி நண்பகல் 11 மணி முதல் மதியம் 1 வரை  குறைந்தது 15 நிமிடங்களாவது சூரியஒளி உடலில் படுவது போல நிற்க வேண்டும். இதன் மூலம் நமக்குத் தேவையான வைட்டமின் டி கிடைக்கும். உங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள். எடை அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்யுங்கள். 
மிதமான உடற்பயிற்சிகள், யோகா பயிற்சிகள் உங்களுடைய மன அழுத்தத்தை குறித்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், உங்கள் உடலில் ஈரத்தன்மையை அதிகரிக்கவும் அடிக்கடி தண்ணீர் குடிக்கவும். 
புகைப்பழக்கம், மது போன்றவற்றைத் தவிர்க்கவும். இரவு நேரத்தில் தூக்கத்தை உறுதி செய்யவும். நண்பர்கள், உறவினர்களுடன் தொடர்பில் இருங்கள். உடல் நலக்கோளாறுகள், மன நலக்கோளாறுகளுக்கு தொலைப்பேசி வழியே மருத்துவர்களிடம் ஆலோசனை செய்யுங்கள். 
 

Comments


View More

Leave a Comments