பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்


பப்பாளி... மிக சாதாரணமாக கிடைக்கும் பழங்களுள் ஒன்று. பப்பாளியில் ஜீரணத்தை தூண்டும் சக்தி உள்ளதால் அசைவ உணவு சாப்பிடுகிறவர்கள் பப்பாளி பழம் சாப்பிடுவதன்மூலம் பலன் கிடைக்கும். பொதுவாக குடல் நோய்களை குணமாக்கும் பப்பாளி மலச்சிக்கல், மூல நோய் மற்றும் ரத்த ஒழுக்கு, நாள்பட்ட வயிற்றுப்போக்கு ஆகியவற்றை கட்டுப்படுத்தக்கூடியது. காலை உணவுக்குப்பதில் பப்பாளிப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடம்பில் உள்ள கழிவுகளை அகற்றுவதோடு மலச்சிக்கல் பிரச்சினையே வராமல் பார்த்துக்கொள்ளும்.

பப்பாளிப்பழத்தை தேனுடன் கலந்து சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி குணமாகும். குழந்தைகளுக்கு அடிக்கடி பப்பாளிப்பழம் கொடுத்து வந்தால் அவர்களது உடல்வளர்ச்சி நன்றாக இருக்கும். கூடவே பல், எலும்பு போன்றவை வலுப்பெறும். பிரசவமான பெண்கள் பப்பாளிக்காய் பொரியல், கூட்டு, குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் நன்றாக பால் சுரக்கும். இதே பப்பாளிக்காயை சாப்பிடுவதன்மூலம் உடலில் தேவையற்ற சதைகள் குறையும்.

செய்தி நன்றி; திரு.மரியபெல்சின்

 


Comments


View More

Leave a Comments