எஸ்.ரா-வின் உணவு யுத்தம் கட்டுரைத் தொகுப்பு குறித்த ஒரு விமர்சனம்


நிறைய இடங்களில் கவனித்திருக்கிறேன், சோறு என்பதை மிக கவனமாக தவிர்த்து சாதம் என்றோ, Rice என்றோ சொல்வதை. நமக்கு இருக்கும் ஆகப்பெரிய பிரச்சனை நம்மிடையே உள்ள தாழ்வு மனப்பான்மை, அதுவே நாம் உண்ணும் சோற்றைக்கூட சோறு என சொல்ல மறுக்கிறது.. இங்கிருந்து ஆரம்பமாகிறது உணவு யுத்தத்தின் முதல் கட்டுரை.

என்னுடன் பணிபுரியும் பல நண்பர்களை கவனித்திருக்கிறேன், அவர்கள் இந்தியாவில் இருக்கும் போது அதிகமாக பன்னாட்டு உணவு வகைகளையே விரும்புவர், அவர்களையே ஒரு மாத காலம் சொந்த நிலப்பரப்பை விடுத்து வேறு மாநிலத்திற்கோ வேறு நாட்டிற்கோ அனுப்பினால்,

"இன்று சோறு, ரசம் சமைத்தது மகிழ்ச்சியாக உள்ளது",

"தேடிப்பிடித்து இட்லி கிடைக்கும் கடையை கண்டுபிடித்து விட்டேன் "

என Status வைப்பதை காண இயலும். ஆம் S Ra ம் இதே கருத்தை ஆமோதிக்கிறார், பாதி உலகை சுற்றிவந்துவிட்டாலும் இன்னும் மனத்துக்குள் உள்ள கிராமவாசி அப்படியேதான் இருப்பதாக சொல்கிறார். வீட்டில் அறிமுகமான சுவை, எந்த வயதானாலும், எவ்வளவு தூரம் சென்றாலும் மாறிவிடாது தானே அது தான் எங்கு சென்றாலும் சோறையும் இட்லியையும் எதிர்பார்க்கிறது...

இட்லி தொடங்கி, Noodles, Fried rice என ஒவ்வொரு உணவு குறித்தும் அது இந்தியாவிற்கு அறிமுகமான வரலாறு குறித்தும் தெளிவான தரவுகள், உணவின் பின்னால் உள்ள பன்னாட்டு பலம் பொருந்திய நிறுவனங்களின் அரசியல், கொள்ளை லாபம், தொலைக்காட்சி வாயிலாகவும், திரை நட்சத்திரங்கள் மூலமாகவுமே பெரும்பாலான உணவுகள் சந்தையை ஆக்கிரமிக்கின்றன இந்த பெருவெள்ளத்தில் கருப்பட்டியும் கடலை மிட்டாயும் கரைந்து போகின்றன.

அமெரிக்க செய்யும் வாழை அரசியல், பீட்சா உருவான கதை, இந்தியாவின் முதல் பேக்கரி, பீன்ஸ் கேரட் உள்ளூர் காய்கறிகளான கதை என ஏராளமான கட்டுரைகள் உணவு யுத்தத்தில்...

செய்தி நன்றி; ஆனந்த் சகாவு முகநூல் பதிவு


Comments


View More

Leave a Comments