சிபிஆர் சிகிச்சை மேற்கொள்வது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்…
சிபிஆர் எப்படி செய்ய வேண்டும்?
சுயநினைவுடன் இருப்பவருக்கு சிபிஆர் அவசியமா?
யாருக்கெல்லாம் சிபிஆர் தேவை?
சிபிஆர் எனும் இதய மற்றும் சுவாச மீட்பு (CPR CARDIO PULMONARY RESUCITATION )அவசர சிகிச்சையை சுய நினைவு இல்லாத மூர்ச்சை நிலை அடைந்தவருக்கே செய்ய வேண்டும்
சுய நினைவுடன் இருப்பவருக்கு சிபிஆர் தேவையற்றது காரணம் அவருக்கு இதயம் துடிக்கிறது நுரையீரல் சுவாச சுழற்சியை செய்கிறது மூளை திறம்பட இயங்குகிறது என்று அர்த்தம்
சுய நினைவுடன் இருப்பவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டால் அவரை உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்துச் சென்று நெஞ்சு வலிக்கான காரணத்தை அறிந்து சிகிச்சை அளிப்பதே சரியான நடைமுறை.
Must Read: பிறந்த குழந்தை சரியான முறையில் தான் உடல் எடை கூடுகிறதா?
மேலும் சிபிஆர் செய்யும் போது சுயநினைவற்ற நபரை சமதளத்தில் கிடத்தி வைத்து செய்ய வேண்டும் நாற்காலியில் அமர்ந்திருக்கும் நபருக்கு அல்லது சுயநினைவற்ற நபரை அமர வைத்து சிபிஆர் செய்யக்கூடாது
சமதளத்தில் படுக்க வைத்து சிபிஆர் செய்யும் போது தான் இதயம் துடிக்கும் போது உடனடியாக மூளைக்கு ஆக்சிஜன் நிரம்பிய ரத்தம் கிடைக்கும். அமர வைத்து செய்தால் மூளைக்கு ரத்தம் கிடைப்பதில் சுணக்கம் ஏற்படும்

சிபிஆர் மிகவும் எளிதான அவசர சிகிச்சை எனினும் அதைப் பற்றி முறையாக அறிந்திராமல் சுயநினைவுடன் இருப்பவருக்கு முயலும் போது அதிலும் நெஞ்சுப்பகுதியை அதீத வலுவுடன் குத்தும் போது சிபிஆர் மூலம் நெஞ்சுப் பகுதி எலும்புகள் முறிந்து உட்பக்கமாக குத்தி அதனால் பாதகம் ஏற்படும் வாய்ப்பும் உண்டு சரியாக சிபிஆர் செய்யும் முறை குறித்த தமிழ் வீடியோ லிங்க் https://youtu.be/BAEw6jqGwfo
இதில் சிபிஆர் செய்யுமுன் நோயர் சுயநினைவுடன் இருக்கிறாரா? என்பதே முதல் விசயம் சுயநினைவுடன் இருப்பவருக்கு சிபிஆர் தேவையில்லை தானாக மூச்சு விடுபவருக்கு சிபிஆர் தேவையில்லை இதயத்துடிப்பு சரியாக இருப்பவருக்கு சிபிஆர் தேவையில்லை
மேலும் சரியான சிபிஆர் என்றால் இதயத்துடிப்புக்கும் சுவாசத்துக்கும் சேர்த்தே முதலுதவி அளிக்கப்பட வேண்டும் யாருக்கு சிபிஆர் தேவை? மூச்சு பேச்சு இதய துடிப்பு அனைத்தும் திடீரென நின்று மூர்ச்சை நிலையில் சுயநினைவற்றுக் கிடப்பவருக்கு செய்யும் முதலுதவியே சிபிஆர் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை
#CPR #CARDIOPULMONARYRESUCITATION #FirstAid
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

Comments
View More