​உடலில் நீர்ச்சத்தை வறண்டு போகச்செய்யாதீர்கள்


உடலில் தேவையான அளவு நீர்ச் சத்து இருக்க வேண்டும்.அப்போதுதான் நாம் ஆற்றலுடன் திகழ முடியும். உடல் ஆரோக்கியத்துக்கு உடலில் நல்ல நீரேற்றம் இருக்க வேண்டியது அவசியம். 

நீர்ச் சத்து என்பது நமது உடலில் வறட்சி ஏற்படாமல் பாதுகாப்பதுடன் மட்டுமின்றி, நமது ஜீரண சக்திக்கும் துணைபுரிகிறது. இப்போது சுத்தமான ஆரோக்கியமான குடிநீர் கிடைப்பதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. எனவே பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. 
பாட்டிலில் அடைக்கப்படக் குடிநீரைக் குடிக்கலாம் என்றாலும், இயற்கை நமக்குக் கொடையாக அளிக்கும் தண்ணீர் சேமிக்கப்படும் அணைகள் அல்லது ஏரிகளிலிருந்து அரசாங்கங்கள் பைப்கள் மூலம் மக்களுக்கு விநியோகிக்கும் குடிநீரே ஆரோக்கியமானது என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்திக் கூறுகிறது. இயற்கையாகக் கிடைக்கும் தண்ணீரே விலை மலிவானது மற்றும் ஆரோக்கியமானதுமாகும். 
நமது வீட்டின் குழாயில் வரும் குடிநீருக்குப் பதில் நெகிழி பாட்டிலில் அடைக்கப்பட்ட அதில் இனிப்பு சேர்க்கப்பட்ட குளிர் பானங்களை நல்ல தாகத்தின் போது குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மினரல் வாட்டர் என்று சொல்லப்படும் குடிநீர் எல்லாவற்றிலுமே ஏதோ ஒரு வேதிப்பொருள் கலந்திருக்கிறது. எனவே, நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பைப் மூலம் வரும் இயற்கை நமக்கு அளித்த குடிநீரை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குக் குடிக்க வேண்டும்.  

Comments


View More

Leave a Comments