குளிர்காலத்துக்கு ஏற்ற உணவுகள் என்ன...வல்லுநர்கள் சொல்வதை கேளுங்கள்...


மழை பெய்யும்போதோ அல்லது குளிரின் போதோ மொறுமொறுப்பான வறுத்த உணவுகளை தின்பதற்கு சுவையாக இருக்கும். ஆனால், இந்த உணவுகளால் உங்கள் உடல் எடை கூடும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். வறுத்த, சூடான உணவுகள் அந்த நேரத்து குளிருக்கு இதமாக இருக்கும். ஆனால், உடல் எடையை அதிகரித்து விடும். மசாலா உணவுகள் உங்கள் நாக்குக்கு சுவையாக இருக்கும். ஆனால், அவை உங்களுக்கு வாயு கோளாறையும் ஏற்படுத்தும் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.

குளிர்காலத்தில் தேநீர், காஃபி ஆகியவை கூட அளவோடு குடிக்க வேண்டும். அதிக அளவு தேநீர் அல்லது காஃபி குடித்தால் உங்கள் உடலில் உள்ள நீர்சத்தை அவை குறைத்து விடும். சூடான, வறுத்த உணவுகளுக்குப் பதில், சூடான சூஃப் வகைகளை குடிக்கலாம். ஓட்ஸ் , ராகி ஆகியவை சார்ந்த உணவுகளை உட்கொள்ளலாம். அவற்றால் உங்கள் உடலுக்கு போதுமான நார்சத்துகள் கிடைக்கும். தேவையற்ற உடல் எடை அதிகரிக்காது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், வறுத்த, பொறித்த உணவுகளுக்குப் பதில் அவித்த உணவுகளை சாப்பிடுங்கள் அவை உங்கள் மனதுக்கும், உடலுக்கும் ஏற்றதாக இருக்கும்.


Comments


View More

Leave a Comments