புத்தாண்டின் போது சோமோட்டோ உணவு செயலி வாயிலாக நிமிடத்துக்கு 4 ஆயிரம் ஆர்டர்கள்...


கொரோனா தொற்று காரணமாக வீணாக அலையும் பழக்கம் ம க்களிடம் குறைந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். புத்தாண்டு அன்று ஜாலியாக உணவகங்களுக்குச் சென்று உணவு உண்ணும் பழக்கம் உள்ளவர்கள் இந்த ஆண்டு வீட்டில் இருந்தபடியே உணவு விநியோக செயலிகளில் உணவை ஆர்டர் செய்து உண்டனர்.

இதன்காரணமாக புத்தாண்டு அன்று உணவு செயலிகளின் வாயிலாக  நிமிடத்துக்கு 4254 ஆர்டர்கள் குவிந்தன. புத்தாண்டு தொடங்குவதற்கு முதல் நாள் மாலை சொமோட்டோ, ஸ்விக்கி போன்ற உணவு செயலிகள் வாயிலாக நிமிடத்துக்கு 3,200 ஆர்டர்கள் செய்யப்பட்டுள்ளன.  

செமோட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி  தீபிந்தர் கோயல், இது குறித்து வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,  புத்தாண்டுக்கு முதல் நாள் மாலை ஆறு மணிக்கு தங்களது செயலியில் நிமிடத்துக்கு 2500 ஆர்டர்கள் குவிந்த தாக கூறி உள்ளார். நேரம் செல்ல, செல்ல ஆர்டர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. நிமிடத்துக்கு 4,254 ஆர்டர்கள் வரை அதிகரித்ததாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். புத்தாண்டு முதல் நாள் இரவு மட்டும் ஒரு லட்சம் ஆர்டர்கள் பெறப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளன. இதனால், சொமோட்டா நிறுவனத்துக்கு ரூ.70 கோடி வருவாய் கிடைத்தது. ஸ்விக்கி நிறுவனத்துக்கும் கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு ஆர்டர்கள் அதிகம் இருந்தன.


Comments


View More

Leave a Comments