ஆரோக்கியமான அசைவ உணவுகள்


அசைவ உணவுகள் ஆரோக்கியமற்றவை என்று முற்றிலும் ஒதுக்கிட முடியாது. அவற்றை சமைக்கும் முறையிலும், உண்ணும் முறையிலும்தான் ஆரோக்கியத்தின் அம்சங்கள் அடங்கி இருக்கின்றன.

பதப்படுத்தப்பட்ட இறைச்சி உணவுகளை உண்பது உடல்நலனுக்கு நல்லதல்ல. நன்றாக சமைத்த இறைச்சி உணவுகள்தான் ஆரோக்கியத்துக்கு நல்லது. மாட்டிறைச்சியில் புரத சத்துகள் அதிகம் இருக்கின்றன. கோழி இறைச்சியில் குறைவான கொழுப்பும், கலோரிகளும் உள்ளன. ஆனால், புரத சத்து அதிகம் இருக்கிறது. கார்போ ஹைட்ரேட் குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தால், கோழி இறைச்சியை அதிகம் சாப்பிடலாம். ஆட்டிறைச்சியும் உடலுக்கு நல்லது. இலை, தழைகளை உண்ணும் ஆட்டின் இறைச்சியில் நிறைவான சத்துகள் இருக்கின்றன.

இறைச்சிகளிலேயே கடல் உணவுகள்தான் மிகவும் சத்துமிக்கவை. ஆரோக்கியமானவையும் கூட.  குறிப்பாக ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் அயோடின் சத்துகள் கடல் உணவுகளில் அதிகம் இருக்கின்றன. கடல் உணவுகளை உட்கொள்பவர்களுக்கு காய்ச்சல் வரும் வாய்ப்புகள் குறைவு என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதயநோய் உள்ளவர்களுக்கும், மனக்கவலை உள்ளவர்களுக்கும் ஏற்றது கடல் உணவுகள்தான். இளவயதில் முதிய தோற்றம் அளிப்பதையும் கடல் உணவுகள் தடுக்கும்.


Comments


View More

Leave a Comments