அறுசுவைகள் என்னென்ன என்று தெரியுமா?


 

இனிமை, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு ஆகிய சுவைகள் அறுசுவைகள் எனப்படுகின்றன.

இனிப்பு,கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவை கொண்ட உணவுப் பொருட்களை  நாம் சாப்பிடும்போது மன மகிழ்ச்சி அதிகரிக்கும். பித்தத்தை போக்கும். அதே நேரத்தில் அளவுக்கு அதிகமாகப் போய்விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமானால், உடலுக்குப் பாதகமான விளைவுகள் ஏற்படக் கூடும்.

புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு ஆகிய சுவை கொண்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டால் வாதம் சீராகும், கபம் குணம் அடையும், நா வறட்சி இல்லாமல் இருக்கும். ஜீரண சக்தி சீராக இருக்கும். உடலில் ஆற்றலை அதிகரிக்கும். ஆனால், இந்த சுவைகளையும் அளவோடுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு மிஞ்சினால், அதுவே நஞ்சாகக் கூடும்.

இனிப்பு சுவை; கரும்பு, தேன், பலா, வாழைப்பழம் போன்ற இயற்கை நமக்குத் தரும் உணவுப் பொருட்கள் எல்லாவற்றிலுமே இனிப்பு சத்து இருக்கிறது.

புளிப்பு சுவை; எலுமிச்சை, மாங்காய், புளி போன்ற இயற்கை உணவுப் பொருட்களில் புளிப்பு சுவை மிகுந்துள்ளது. புளிப்பு சுவையையும் அளவோடுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உவர்ப்பு; உப்பு இல்லா பண்டம் குப்பையிலே என்று சொல்வது வழக்கம். உப்பு என்பது அத்தியாவசியம்.ஆனால், அதுவே கொஞ்சம் கூடினாலோ அல்லது குறைந்தாலோ சுவையே மாறி விடும் என்பது மட்டுமின்றி அதனால் உடலில் பக்கவிளைவுகளும் ஏற்படும்.

கசப்பு சுவை;  எள், வேப்பங்காய், கடுகு போன்றவை கசக்கும் தன்மை கொண்டவை.   கசப்பு தன்மை கொண்ட பாவற்காயில் பல சத்துகள் உள்ளன. பசியைத் தூண்டக் கூடியது. பித்த த்தை குறைக்கும். வயிற்றுப் புழுவை நீக்க க் கூடியது. நீரழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் சிறந்தது.

கார்ப்பு சுவை; மிளகு, வெங்காயம், மிளகாயில் காரம் எனப்படும் கார்ப்பு சுவை உள்ளது. மிளகில் கால்சியம், இரும்பு சத்துகள் உள்ளன. நரம்பு தளர்ச்சி, நரம்பு கோளாறுகளை அகற்றும். ஜீரண உறுப்புகள் சிறப்பாக செயல்பட மிளகு உதவுகிறது.

துவர்ப்பு சுவை; பாக்கு, நெல்லிக்காய், வாழைப்பூ ஆகியவற்றில் துவர்ப்பு சுவை இருக்கிறது. நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து இருக்கிறது. நெல்லிக்காயில் 80 சதவிகிதம் நீர் சத்தும், புரதம், மாவு சத்து, நார் சத்து, தாதுப் பொருட்களும் உள்ளன.


Comments


View More

Leave a Comments