கண்களைப்பாதுகாக்கும் இந்த உணவுகளை உட்கொள்ளுங்கள்


உடல் உறுப்புகளில் வெளி உலகத்தோடு நம்மை தொடர்பு கொள்ளும் பார்வையாக இருப்பது கண்கள். நமது இரண்டு கண்களும் ஆரோக்கியமாக இருந்தால்தான் வாழ்நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இயங்க முடியும்.

வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ, துத்த நாகம் நிறைந்த உணவு வகைகளை உண்பது கண்களுக்கு ஆரோக்கியம் தரும். இந்த சத்துகள் நிறைந்த பழங்கள், காய்கறிகளை உண்பது நல்லது.

கீரைகள் உள்ளிட்ட பச்சைநிற காய்கறிகள், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் வகைகள் சாப்பிட்டால், கண்நோய் ஏற்படாமல் தடுக்க முடியும். அதே நேரத்தில் கண்களின் ஈரபதத்தை தக்கவைத்துக் கொள்ளவும் மீன் உணவு உதவுகிறது. துத்தநாகம் அதிகம் உள்ள முழு தானியங்கள், வேர்கடலை, பால்பொருட்கள், முட்டை, இறைச்சி வகைகளை உண்ணலாம். வாழைப்பழங்கள், பீன்ஸ், உருளைக் கிழங்கு ஆகியவற்றில் வைட்டமின் சத்துகள் உள்ளன.  

பருப்பு வகைகளில் அதிக அளவு வைட்டமின் ஈ சத்து உள்ளது. முந்திரியும் கண்பார்வைக்கு ஏற்ற உணவுப் பொருளாகும். கேரட்டில் பீட்டோ கரோடின் மற்றும் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. கண்களுக்கு மிகவும் முக்கியமான ரெஹோடோஸ்பின் என்ற புரதம் சுரப்பதற்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியமானதாகும்.


Comments


View More

Leave a Comments