தாய்பாலின் மகத்துவத்தை உணருங்கள்
இந்த உலகில் பிறக்கும் எல்லோரின் முதன் உணவு தாயிடம் இருந்து இயற்கையின் கொடையாக கிடைக்கும் தாய்பால்தான். தாய்பாலை விடவும் வேறு எந்த உணவும் பிறந்த குழந்தைக்கு ஈடில்லை. சுத்தமான, நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட தாய்பாலை பிறந்த குழந்தைகள் குடிக்கும்போது அந்த குழந்தைகளுக்கு சிறுவயதில் ஏற்படும் பல உடல் நலக்குறைவுகள் முற்றிலும் தடுக்கப்படுகின்றன. குழந்தை பிற முதல் ஆறுமாதங்களுக்கு தாய்பாலை தவிர வேறு எதுவும் குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. குழந்தைகளுக்குத் தேவையான திரவ வடிவிலான மற்றும் நுண்ணூட்ட சத்துகள் தாய்பாலில் நிறைந்துள்ளன.
குழந்தை பிறந்து ஆறுமாதங்கள் கழித்து பல்வேறு வகையான ஏற்ற, பாதுகாப்பான, நுண்ணூட்டசத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளுடன் தாய்பாலை இணை உணவாக கொடுக்கலாம். குழந்தைகளுக்கு இரண்டு வயது வரையும் அதற்கு பின்னாலும் கூட தாய்பாலை தொடர்ந்து கொடுக்கப்பது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், அது ஆயுள் முழுவதும் ஆரோக்கியத்துடன் இருப்பதையும் உறுதி செய்யும்.
Comments