தலைமுடியை வலுப்படுத்தும் இயற்கை உணவுகள்


நாம் எதைப்பற்றி கவலைப்படுகிறோமோ இல்லையோ தலைமுடி கருகருவென இருக்க வேண்டும் என்று எல்லோருமே விரும்புகின்றோம். அதனால்தான் இளநரை தோன்றிய பின்னர் கூட டை அடித்து முடியை கருப்பாக ஆக்க முயற்சிக்கின்றோம்

தலைமுடியை வலுப்படுத்தும் உணவுகளை சாப்பிட்டாலே முடி ஆரோக்கியமாக உதிராமல் இருக்கும்.

வைட்டமின் சி உள்ள உணவு

நம் தலைமுடியின் வேர்களை வலுப்படுத்துவதில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி அதிகம் உள்ள நாவல்பழத்தை சாப்பிட்டால் உங்கள் முடி  வலுவாக இருக்கும். முடிக்குத் தேவையான கொலாஜன் உற்பத்திக்கும் நாவல்பழம் வழிவகுக்கிறது.

வைட்டமின் ஈ உள்ள உணவு

முடி உதிர்வதைத் தடுப்பதில் வைட்டமின் ஈ முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஈ சத்து, வெந்தயத்தில் அதிகம் காணப்படுகிறது. மன உளைச்சல் அதிகம் இருப்பவர்களுக்கு முடி உதிரும். வெந்தயம் சாப்பிடுவதால் மன உளைச்சல் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. குறிப்பாக வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் சாப்பிட வேண்டும்.

புரோட்டின் உணவு

முடிவளர்வதற்கு புரோட்டின் முக்கிய பங்காற்றுகிறது. எனவே புரோட்டின் அதிகம் உள்ள முட்டையை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். புரோட்டின் மட்டுமல்ல பயோட்டின் என்ற சத்தும் முட்டையில் இருக்கிறது.

வைட்டமின் பி

கீரையில் வைட்டமின் பி அதிகம் இருக்கிறது. இரும்பு சத்தும் கீரையில் இருக்கிறது. இரும்பு சத்து குறைபாட்டல் முடி உதிரக்கூடும். கீரை அதிகமாக சாப்பிட்டால் முடி உதிர்வதைத்தடுக்க முடியும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

மீன் உணவை அதிகம் எடுத்துக் கொள்வதன் மூலம் நமக்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கிடைக்கும். முடியின் அடர்த்தியை அதிகரிக்க ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உதவுகிறது. மீனில் இருக்கும் வைட்டமின் டி-யும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.


Comments


View More

Leave a Comments