ஈஸியா செய்யுங்க பூசணி அல்வா


 

பூசணிக்காய் அல்வா. ரொம்ப நாளா செய்யணும்னு நினைச்சேன். இப்போதான் நேரம் கிடைச்சிச்சு. நேற்று மாலை மெனக்கெட்டு செஞ்சது. எப்பிடி செய்யணும்னுதானே கேக்குறீங்க. ரொம்ப ஈசி.

தண்ணியில சீனி (சர்க்கரை) கலந்து நல்லா கொதிக்க வைங்க. (பாகு பதம் வரணும்னு கட்டாயம் இல்லை). ஓரளவு தண்ணி கொதிச்சதும் துருவி வச்ச கல்யாண பூசணியைப்போட்டு நல்லா கிளறுங்க. இதுக்கு இடையில போட்டுக்கோங்க.

இறுகலா வரும்போது நெய் ஊத்திக்கோங்க. கடைசியில முந்திரி, திராட்சை போட்டா நல்லா இருக்கும். நான் ஏலக்காய் மட்டுமே சேர்த்தேன். நெய்யும் ஊத்தலை, முந்திரி, திராட்சையும் சேர்க்கலை. ஆனாலும் பிள்ளைகள் உள்பட எல்லோருமே விரும்பி சாப்பிட்டோம். நல்ல டேஸ்ட்.

செய்தி மற்றும் புகைப்படம்  நன்றி; திரு. Maria Bellsin முகநூல் பதிவு


Comments


View More

Leave a Comments