உணவில் சேர்த்துக்கொள்ளும் கசகசாவால் எத்தனை நன்மைகள் தெரியுமா?


கசகசா… நம்ம ஊர் மளிகைக் கடைகளில் சர்வசாதாரணமாக கிடைக்கும் உணவுப்பொருள். கசகசாவின் மருத்துவ குணங்களைப் பற்றி பார்ப்போம்

வயிற்று போக்கு ஏற்படும் நேரத்தில் சிறிதளவு கசகசாவை வாயிலிட்டு மென்று சிறிதளவு நீர் குடித்து வர வயிற்றுபோக்கு நிற்கும்.  கசகசா, முந்திரி பருப்பு, பாதம் பருப்பு இவற்றை வகைக்கு 100 கிராம் அளவு எடுத்து பொடியாக்கி காலை, மாலை என இருவேளை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து உண்டுவர உடல் வலிமை பெறும். தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் இரவு நேரங்களில் கசகசாவை பாலில் அரைத்து உண்டால் தூக்கம் நன்றாக வரும்.

கசகசாவை துவையலாக அரைத்து உண்டு வந்தால் உடல் வலிமை பெறும். நீரிழிவு நோய் கட்டுப்படும். தூக்கம் நன்றாக வரும். நரம்புகள் வலுவாகும். விந்து கட்டும். உடல் வலிமை பெறும். ஆண்மை பெருகும். உடல் பொலிவு பெறும். நரம்புகள் பலம் பெறும். மாதவிடாய் முடிவுக்கு வரும் மேனோபாஸ் காலகட்டத்தில் பெண்களுக்கு உடல் வறண்டுபோகும். கண்களை சுற்றி கருவளையமும் சுருக்கமும் உண்டாகும். உடல் பலமும் குறையும். அப்போது கசகசா மற்றும் பாதாம்பருப்பை அரைத்து பாலில் கலந்து பருகலாம்.

கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும். அதிலுள்ள ஒலியீக் ஆசிட், லினோலியிக் ஆசிட் போன்ற அமினோ அமிலங்கள் மாரடைப்பைத் தடுத்து, பக்கவாதத்தில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. கசகசா விதைகள் உடலுக்கு குளிர்ச்சி அளித்து வாய் புண்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வாய் புண்களை விரைவில் ஆற்றுகின்றன. உலர்ந்த தேங்காய், பொடித்த சர்க்கரை மிட்டாய், நில கசகசா விதைகள் ஆகியவற்றை நன்கு கலந்து கொள்ளவும். வாய் புண்களிலிருந்து உடனடி நிவாரணம் பெற, இக்கலவையை ஒரு சிறு சிறு துண்டுகளாக செய்து, மிட்டாய் போல மென்று சுவைத்து சாப்பிடுவதன் மூலம் வாய் புண்கள் விரைவில் குணமடையும்.

உடலுக்கு ஆற்றல் அளிக்கும் சிறு ஊட்டச்சத்துக்களான சிக்கலான கார்போஹைட்ரேட்கள் கசகசா விதைகளில் அடங்கியுள்ளது. இந்த விதைகள் கால்சியம் சத்தை உறிஞ்சி உடல் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றன.

 

 


Comments


View More

Leave a Comments